Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித் சொன்ன ஒரு வார்த்தை.. தீபக் சாஹர் உடைத்த சீக்ரெட்.. மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆனது எப்படி??

Recommended Video

கூட்டம் போட்ட ரோஹித்... இந்தியா வெற்றிக்கு முக்கிய காரணம் இதுதான்

நாக்பூர்: வங்கதேசத்திற்கு எதிராக டி 20 போட்டியில் தீபக் சாஹர் ஹாட்ரிக் எடுக்க கேப்டன் ரோஹித் சர்மா கொடுத்த ஐடியாதான் காரணம் என்கிறார்கள்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2 -1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த போட்டியில் வெறும் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றிய தீபக் சாஹர் கலக்கினார்.

இதன் மூலம் அவர் டி20 போட்டியில் வரலாற்று சாதனைப் படைத்தார். மேலும் நான் செய்த இந்த சாதனைக்கு ரோஹித் சர்மா சொன்ன மாஸ்டர் பிளான் தான் காரணம் என்று தீபக் சாஹர் தெரிவித்துள்ளார்.

பந்துவீச்சில் மிரட்டிய சாஹர்

பந்துவீச்சில் மிரட்டிய சாஹர்

175 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது பேட்டிங்கை தொடர்ந்த பங்களாதேஷ் அணி ஆரம்பத்தில் பொறுமையாக விளையாடியது. முகமது நைம் மற்றும் முகமது மிதுனும் நல்ல பார்ட்னர்ஷிப் தர ஒரு கட்டத்தில் பங்களாதேஷ் அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. பகல் இரவு போட்டி என்பதால் பனி காரணமாக பவுலர்கள் விக்கெட் எடுக்க திணறி கொண்டு இருந்தனர்.

நல்ல நேரம்

நல்ல நேரம்

அந்த சமயத்தில்தான் கேப்டன் ரோஹித் சர்மா வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹாரின் மீது நம்பிக்கை வைத்து பந்தை அவரிடம் கொடுத்தார். அவரும் கேப்டன் தன் மீது வைத்த நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வகையில் சிறப்பாக பந்து வீசி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

சாஹர் பேட்டி

சாஹர் பேட்டி

பந்து வீச்சாளர்களுக்குப் பொருந்தாத சூழ்நிலைகளில் ஹாட்ரிக் எடுப்பது மற்றும் இந்தியாவை வெற்றிபெற வைத்தது பற்றி எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கேப்டன் ரோஹித் என் மீது காட்டிய நம்பிக்கையே என்னை மகிழ்ச்சியடையச் செய்கிறது.

என்ன பிளான்?

என்ன பிளான்?

மேலும் அவர் கூறுகையில், "ரோஹித் போட்டி நடைபெற்ற அன்று நான் உன்னை பும்ராவாகப் பயன்படுத்துவேன்" என்று கூறினார். முக்கியமான ஓவர்களில் நான் உன்னை பந்து வீச அளிப்பேன் என்று கூறினார். அது எனக்கு ஊக்கமளித்தது. அழுத்தத்தின் கீழ் எனக்கு பொறுப்பு வழங்கப்படும் போது நான் அதை விரும்புகிறேன், ஏனென்றால் அது என் மீது பிறர் வைத்த நம்பிக்கையை உணர்கிறது. சில சமயங்களில் யாரும் என்னை நம்பாதபோது நான் மோசமாக உணர்த்தேன். ஆனால் இந்த போட்டியில் கேப்டனிடமிருந்து அந்த நம்பிக்கையைப் பெற்ற நான் மகிழ்ச்சியாக உணர்த்தேன், "என்று அவர் கூறினார்.

பும்ரா தான் பெஸ்ட்:

டி20 போட்டிகளில் தற்போது பும்ரா தான் நம்பர் 1 பந்து வீச்சாளர் என்பதில் சந்தேகம் இல்லை, அவருடன் என்னை ஒப்பிடுவது பெருமைக்குரிய விஷயம. பும்ரா எங்கு நிற்கிறார் என்பது எனக்குத் தெரியும், அதே போல் நான் எங்கு நிற்கிறேன் என்பதும் எனக்குத் தெரியும்.

அவருடன் போட்டியா?

அவருடன் போட்டியா?

நான் அவருடன் போட்டியிடவில்லை, என் வேலையை நன்றாக செய்ய வேண்டும். விளையாட்டில் கவனம் செலுத்தி அணியை வெற்றி பெற வைப்பதே என்பதே எனது முன்னுரிமையாக பார்க்கிறேன்.

ரோஹித் கொடுத்த நம்பிக்கை

ரோஹித் கொடுத்த நம்பிக்கை

ஆட்டத்தின் 12 ஓவர் முடிவில், ​​நான் கேப்டனிடம் போய் பந்தைக் கேட்க விரும்பினேன், ஆனால் கேப்டன் தனது திட்டத்தை வைத்து எனக்கு பந்தைக் கொடுப்பார் என்று எனக்குத் தெரியும். விளையாட்டையும் தொடரையும் நாம் இழக்கக்கூடாது என்பதே எங்கள் முழு எண்ணமாக இருந்தது.

கடைசியில் செய்தார்

கடைசியில் செய்தார்

அதை சரியாக ரோஹித் புரிந்து கொண்டு என் மீது நம்பிக்கை வைத்து இறுதி ஓவர்களை வீச என்னை அழைத்தார்.அதை வெற்றி கரமாக செய்தது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் கூறினார்.

சென்னை அனுபவம் கைகொடுத்தது

சென்னை அனுபவம் கைகொடுத்தது

சென்னையில் விளையாடியது நிறைய உதவியது. சென்னையில் நிறைய டியூ இருக்கும், அதனால் நான் நிறைய தவறுகளைச் செய்திருக்கிறேன், அந்த சூழ்நிலைகளில் நோ-பந்துகளை வீசினேன், ஆனால் அதிலிருந்து நான் கற்றுக்கொண்டேன். இந்த சூழ்நிலைகளில் என்ன பந்து வீசுவது, என்பது பற்றி அந்த அனுபவத்திலிருந்து நான் கற்றுக்கொண்டேன் என்றும் கூறினார்.

Story first published: Tuesday, November 12, 2019, 12:18 [IST]
Other articles published on Nov 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+