Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs BAN: இன்னும் 7 சிக்ஸ் அடித்தால் போதும்.. சேவாக்கின் இமாலய சாதனையை ரோஹித் முறியடிக்க வாய்ப்பு

சென்னை: வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா ஏழு சிக்ஸ் அடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர் ஏழு சிக்ஸ் அடித்தால் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸ் அடித்த இந்திய வீரர் என்ற வீரேந்தர் சேவாக்கின் சாதனையை முறியடிப்பார்.

தற்போது சர்வதேச கிரிக்கெட் ஆடி வரும் வீரர்களில் அதிக சிக்ஸ் அடித்த வீரராக இருக்கிறார் ரோஹித் சர்மா. ஏற்கனவே, சிக்ஸ் அடிப்பதில் பல்வேறு உலக சாதனைகளை அடித்து நொறுக்கி இருக்கிறார். இந்த நிலையில் அவர் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக சிக்ஸ் அடித்த வீரர் என்ற சாதனையை செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ind vs ban india rohit sharma

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இரண்டாவது போட்டி கான்பூரில் நடைபெற உள்ளது. வங்கதேச அணிக்கு எதிராக ரோஹித் சர்மா நிச்சயமாக ஆறு சிக்ஸ் அல்லது அதற்கு மேல் அடித்து விடுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

வீரேந்தர் சேவாக் 103 டெஸ்ட் போட்டிகளில் 178 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து அதில் 90 சிக்ஸ் அடித்து இருக்கிறார். ரோஹித் சர்மா 59 டெஸ்ட் போட்டிகளில் 101 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 84 சிக்ஸ் அடித்து இருக்கிறார். தற்போது கிரிக்கெட் ஆடி வரும் இந்திய வீரர்களில் ரோஹித் சர்மாவுக்கு அடுத்து அதிக சிக்ஸ் அடித்து இருப்பது ரவீந்திர ஜடேஜா மட்டுமே. அவர் டெஸ்ட் போட்டிகளில் 64 சிக்ஸ் அடித்து இருக்கிறார்.

ஒட்டுமொத்தமாக இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸ் அடித்த வீரர்கள் பட்டியலில் வீரேந்தர் சேவாக் 90 சிக்ஸர்களுடன் முதல் இடத்திலும், ரோஹித் சர்மா 84 சிக்ஸ் அடித்து இரண்டாவது இடத்திலும், தோனி 78 சிக்ஸ் அடித்து மூன்றாவது இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் 69 சிக்ஸ் அடித்து நான்காவது இடத்திலும் உள்ளனர். ரவீந்திர ஜடேஜா 64 சிக்ஸ் அடித்து ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். இந்தியாவின் முன்னணி டெஸ்ட் பேட்ஸ்மேனான விராட் கோலி 113 டெஸ்ட் போட்டிகளில் 191 இன்னிங்ஸ்களில் ஆடி இருந்தாலும் இதுவரை 26 சிக்ஸ் மட்டுமே அடித்து இருக்கிறார்.

ஒருவேளை வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா இந்த சாதனையை முறியடிக்காமல் போனால் அடுத்து நடைபெற உள்ள நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் முறியடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. தற்போது முதல் டெஸ்ட் நடக்க உள்ள சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்திய அணி தொடர்ந்து பத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருப்பதால் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஏழு நாட்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட உள்ளனர் இந்திய வீரர்கள்.

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணி :

ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே எல் ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்),

Story first published: Sunday, September 15, 2024, 13:37 [IST]
Other articles published on Sep 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+