For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சின் கொடுத்த ஐடியா.. மூட்டை முடிச்சை கட்டி வங்கதேசத்தை வீட்டுக்கு அனுப்பிய கோலி!

Recommended Video

Ind vs ban 2nd test: Tendulkar's idea helped kohli to beat bangladesh

கொல்கத்தா : இந்தியா - வங்கதேசம் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி வெறும் இரண்டரை நாளில் முடிவுக்கு வந்தது.

இந்தப் இந்தியா எப்படியும் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் என்றாலும், இத்தனை விரைவாக வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார் சச்சின்.

ஆம், இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்துக்குப் பின் சச்சின் - கோலி சந்தித்து பேசி உள்ளனர்.

வங்கதேசத்தை வீழ்த்திய யோசனை

வங்கதேசத்தை வீழ்த்திய யோசனை

அந்த சந்திப்பின் போது, சச்சின், பகல் - இரவு டெஸ்ட் போட்டியை எப்படி அணுகலாம் என ஒரு யோசனையை கூறி இருக்கிறார். அதன்படி செயல்பட்ட கேப்டன் கோலி இரண்டாம் நாள் சில அதிரடி முடிவுகளை எடுத்து வங்கதேச அணியை விரைவாக வீழ்த்தி இருக்கிறார்.

முதல் பகல் இரவு டெஸ்ட்

முதல் பகல் இரவு டெஸ்ட்

இந்தியா - வங்கதேசம் இரு அணிகளும் தங்கள் முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் பிங்க் நிற பந்தில் விளையாடின. இந்தப் போட்டிக்கு எப்படி திட்டமிடுவது என்பதில் இரு அணிகளுக்குமே முன் அனுபவம் இல்லை.

முதல் நாள் ஆட்டம்

முதல் நாள் ஆட்டம்

இந்த நிலையில், முதல் நாள் டாஸ் வென்று பேட்டிங் செய்த வங்கதேசம் 106 ரன்களில் ஆல் - அவுட் ஆனது. அடுத்து ஆடிய இந்திய அணி 2 விக்கெட்களை இழந்து ஆடி வந்தது. கோலி, புஜாரா பேட்டிங் செய்து வந்தனர்.

சச்சின் - கோலி சந்திப்பு

சச்சின் - கோலி சந்திப்பு

முதல் நாள் ஆட்டத்துக்குப் பின் சச்சினை சந்தித்துள்ளார் கேப்டன் கோலி. அப்போது இதுவரை பகல் - இரவு டெஸ்ட் போட்டிகளில் ஆடி இராத சச்சின், தன் நீண்ட நெடிய கிரிக்கெட் அனுபவம் மற்றும் அறிவைக் கொண்டு பகல் - இரவு டெஸ்ட் போட்டியை எப்படி அணுக வேண்டும் என்ற யோசனையை கூறி இருக்கிறார்.

சச்சின் சொன்ன யோசனை

சச்சின் சொன்ன யோசனை

சச்சின் சொன்ன யோசனை இதுதான் - பகல் இரவு டெஸ்ட் போட்டி மதியம் துவங்கும் நிலையில், அந்த நாளின் முதல் பகுதி (மதியம்) என்பது பகல் டெஸ்டின் மதிய நேர ஆட்டம் போன்றது. அப்போது பந்துவீச்சு மந்தமாக இருக்கும்.

மாலைப் பொழுது நேரம்

மாலைப் பொழுது நேரம்

பகல் - இரவு டெஸ்டின் மாலைப் பொழுது என்பது, பகல் டெஸ்டின் காலைப் பொழுது போன்றது. அந்த நேரத்தில் பந்து ஸ்விங் ஆகும். கூடுதல் வேகம் கிடைக்கும். அதே போல இரவு நேர ஆட்டம் என்பது, பகல் டெஸ்டின் மாலை நேர ஆட்டம் போன்றது என சச்சின், கோலியிடம் கூறி இருக்கிறார்.

கோலி டிக்ளர் முடிவு

கோலி டிக்ளர் முடிவு

இரண்டாம் நாள் முதல் பகுதியில், மதிய நேரத்தில் இந்திய அணி மாலை நேரம் வருவதற்குள் விரைவாக ரன் குவித்தது. சரியாக மாலை நேரம் வந்த உடன், இந்தியா 241 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்று இருந்த நிலையில், இன்னும் ஒரு விக்கெட் கையில் இருந்தாலும், முதல் இன்னிங்க்சை டிக்ளர் செய்தார் கோலி.

அந்தி மாலை நேரம்

அந்தி மாலை நேரம்

சரியாக அந்தி மாலை நேரத்தில், சச்சின் கூறியது போன்றே பகல் டெஸ்டின் காலை நேரம் போல, முழுமையாக வேகப் பந்துவீச்சாளர்களை களமிறக்கினார் கோலி. அது சரியாக வேலை செய்தது.

நான்கு விக்கெட்கள்

நான்கு விக்கெட்கள்

அந்தி மாலை முடிவதற்குள் இந்தியா 13 ரன்களுக்கு 4 விக்கெட்கள் வீழ்த்தி வங்கதேச அணியை நிலைகுலைய வைத்தது. அதன் பின் இரவு நேரத்தில் வங்கதேசம் சற்று தாக்குப் பிடித்து ரன் எடுத்தது.

எளிதான வெற்றி

எளிதான வெற்றி

மூன்றாம் நாள் முதல் பகுதி ஆட்டத்திலேயே இந்தியா வங்கதேச அணியின் மீதமிருந்த விக்கெட்களை வீழ்த்தி இன்னிங்க்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று அந்த அணியை விரைவாக வீட்டுக்கு அனுப்பி வைத்தது.

Story first published: Monday, November 25, 2019, 15:10 [IST]
Other articles published on Nov 25, 2019
English summary
IND vs BAN : Sachin Tendulkar’s idea helped Kohli to beat Bangladesh quicker.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+