Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சேட்டையை கொடுத்த சேட்டன்.. ரோஹித் சர்மா சாதனைக்கு ஆப்பு.. தாறுமாறு சம்பவம் செய்த சஞ்சு சாம்சன்!

ஐதராபாத்: வங்கதேச அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் 22 பந்துகளில் அரைசதம் அடித்து சம்பவம் செய்துள்ளார். இதன் மூலமாக வங்கதேச அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட்டில் விரைவாக அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

கடந்த 9 ஆண்டுகளாக இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிப்பதற்காக இளம் வீரர் சஞ்சு சாம்சன் போராடி வருகிறார். ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இடம்பிடித்த போதும், பிளேயிங் லெவனில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் முதன்மை விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டார்.

ind vs ban sanju samson rohit sharma


அதுமட்டுமல்லாமல் தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் தான் களமிறங்குவார் என்றும் தெரிய வந்தது. இதனால் சஞ்சு சாம்சன் தனது திறமையை நிரூபிக்கும் வகையில் மிகப்பெரிய இன்னிங்ஸை ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் டி20 போட்டியில் 19 பந்துகளில் 29 ரன்களும், 2வது டி20 போட்டியில் 7 பந்துகளில் 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு இனியும் இடம் கிடைக்காது என்று பார்க்கப்பட்டது. இந்த நிலையில் 3வது டி20 போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் -அபிஷேக் சர்மா கூட்டணி களமிறங்கியது. வழக்கம் போல் ஆக்ரோஷம் காட்டாமல், சஞ்சு சாம்சன் முதல் ஓவரிலேயே சில பவுண்டரியை அடித்தார்.

பின்னர் டஸ்கின் அஹ்மத் வீசிய 2வது ஓவரிலேயே தொடர்ச்சியாக 4 பவுண்டரிகளை விளாசி சஞ்சு சாம்சன் அசத்தினார். அதன்பின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 4 ரன்களில் ஆட்டமிழக்க, சஞ்சு சாம்சன் - சூர்யகுமார் யாதவ் கூட்டணி இணைந்தது. பின்னர் முஸ்தாஃபிசுர் ரஹ்மான் பவுலிங்கில் சஞ்சு சாம்சன் பவுண்டரி, சிக்ஸ் என்று பொளந்து கட்ட, பவர் பிளேவின் கடைசி ஓவரை வீசிய ரிஷாத் ஹொசைன் பவுலிங்கில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்து 22 பந்துகளில் சஞ்சு சாம்சன் அரைசதத்தை எட்டினார்.

அதில் கவர்ஸ் திசையில் சஞ்சு சாம்சன் அடித்த பவுண்டரி மற்றும் சிக்சர்கள் வியப்பை அளித்தது. இந்த அரைசதம் மூலமாக வங்கதேச அணிக்கு எதிராக குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். இதற்கு முன்பாக ரோஹித் சர்மா 23 பந்துகளில் அரைசதம் அடித்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, October 12, 2024, 19:55 [IST]
Other articles published on Oct 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+