நீ மனுஷனே இல்ல.. ஒரே ஓவரில் 5 சிக்ஸ்.. பொளந்து கட்டிய சஞ்சு சாம்சன்.. கம்பீர், சூர்யா உற்சாகம்!
ஐதராபாத் : வங்கதேச அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் ஒரே ஓவரில் 5 சிக்ஸ் அடித்து சாதனை படைத்துள்ளார். வங்கதேச அணியின் ரிஷாத் ஹொசைன் பவுலிங்கில் 5 சிக்சர்கள் விளாசியதன் மூலமாக ஒரே ஓவரில் 30 ரன்களை விளாசியது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
2007 டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான யுவராஜ் சிங் தொடர்ச்சியாக 6 சிக்சர்களை விளாசி சாதனை படைத்தார். ஸ்டூவர்ட் பிராட் பவுலிங்கில் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் சிக்சர்களை பறக்கவிட்ட காட்சியை எந்த இந்திய கிரிக்கெட் ரசிகனாலும் மறக்கவே முடியாது.
2007 டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான யுவராஜ் சிங் தொடர்ச்சியாக 6 சிக்சர்களை விளாசி சாதனை படைத்தார். ஸ்டூவர்ட் பிராட் பவுலிங்கில் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் சிக்சர்களை பறக்கவிட்ட காட்சியை எந்த இந்திய கிரிக்கெட் ரசிகனாலும் மறக்கவே முடியாது.

அதன்பின் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் சாதனை படைக்கப்பட்டிருந்தாலும், யுவராஜ் சிங் செய்த சம்பவம் தான் உச்சத்தில் உள்ளது. இந்த நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் ஒரே ஓவரில் தொடர்ந்து 5 சிக்சர்களை விளாசி புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்தப் போட்டியில் 22 பந்துகளில் அரைசதம் அடித்த சஞ்சு சாம்சன், அதன்பின் அதிரடியை அடுத்த கியருக்கு மாற்றினார். இதன் காரணமாக 7.1 ஓவர்களில் இந்திய அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடந்தது. தொடர்ந்து 9 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 122 ரன்களாக இருந்தது. அப்போது வங்கதேச அணியின் ரிஷாத் ஹொசைன் பவுலிங் செய்ய அழைக்கப்பட்டார்.
அப்போது சஞ்சு சாம்சன் களத்தில் இருக்க, முதல் பந்தில் ரன் எதுவும் எடுக்கப்படவில்லை. 2வது பந்தை பவுலரின் தலைக்கு மேல் சிக்ஸ் அடித்து அசத்த, 3வது பந்தில் லாங் ஆஃப் திசையில் சிக்ஸ் அடித்து மிரட்டினார். பின்னர் 4வது பந்தில் மீண்டும் பவுலரின் தலைக்கு மேக் சிக்ஸ் அடிக்க, 5வது பந்தில் லாங் ஆன் திசையில் சிக்ஸ் பறந்தது. தொடர்ந்து கடைசி பந்திலும் டீப் மிட் விக்கெட் திசையில் சிக்ஸ் அடித்து சாதனை படைத்தார்.
இதனால் ஒரே ஓவரில் 5 சிக்சர்களை விளாசி சஞ்சு சாம்சன் 30 ரன்களை குவித்தார். இதன் மூலமாக இந்திய டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஓவரில் அதிக ரன்களை விளாசிய 2வது வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். இந்தப் பட்டியலில் யுவராஜ் சிங் 36 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு பின் தனி வீரராக சஞ்சு சாம்சன் 2வது இடத்திலும், ரோஹித் சர்மா 29 ரன்களுடன் 3வது இடத்திலும் இருக்கின்றனர்.
Story first published: Saturday, October 12, 2024, 20:19 [IST]
Other articles published on Oct 12, 2024


Click it and Unblock the Notifications