Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மைதானம் வந்த சாரா டெண்டுல்கர்.. அதிரடிக்கு திரும்பிய சுப்மன் கில்.. சிக்சர் அடித்ததும் உற்சாக குரல்!

புனே: இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசிய நிலையில், அதனை பார்த்த சாரா டெண்டுல்கர் கைகளை தட்டி உற்சாகப்படுத்தியுள்ளார்.

உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் வங்கதேச அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்பின் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 66 ரன்கள் சேர்த்தார். அதேபோல் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி மஹ்மதுல்லா 46 ரன்கள் சேர்த்தார்.

IND vs BAN: Sara Tendulkar claps for Shubman Gill back to back sixes against Bangladesh in World Cup 2023

இதனைத் தொடர்ந்து இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. ஜூனியர் வீரரான சுப்மன் கில் ரன்கள் சேர்க்க சிறிது நேரம் எடுத்து கொண்ட நிலையில், ரோகித் சர்மா முதல் ஓவரிலேயே அட்டாக்கை தொடங்கினார். ஒவ்வொரு ஓவருக்கும் சிக்சரும், பவுண்டரியுமா பறந்து கொண்டே இருந்தது. இதன் காரணமாக 9 ஓவர்களிலேயே இந்திய அணியின் ஸ்கோர் 50 ரன்களை எட்டியது. இந்த நிலையில் 10வது ஓவரில் சுப்மன் கில்லும் அட்டாக்கை தொடங்கினார்.

நசும் அஹ்மத் வீசிய 10வது ஓவரில் 2 சிக்சர்களை விளாசிய சுப்மன் கில், முஷ்டாஃபிகுர் ரஹ்மான் வீசிய 12வது ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசி அசத்தினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் 12 ஓவர்களிலேயே 80 ரன்களை எட்டியது. இதனிடையே சுப்மன் கில் அடுத்தடுத்து சிக்சர் விளாசியதை பார்த்த இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினார். இதனை கேமரா மேன் சரியாக படம்பிடிக்க, மைதானமே உற்சாக குரல் எழுப்பியது.

IND vs BAN: Sara Tendulkar claps for Shubman Gill back to back sixes against Bangladesh in World Cup 2023

கடந்த சில ஆண்டுகளாக சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கரும், இந்திய அணியின் சுப்மன் கில்லும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சுப்மன் கில், சாரா டெண்டுல்கரை டேட் செய்வதை உறுதி செய்தார். அதுமட்டுமல்லாமல் இருவரும் ஒரே இடத்தில் எடுத்து கொண்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியது. அண்மையில் சாரா டெண்டுல்கர் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், இன்று மகாராஷ்டிராவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை போட்டியை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, October 19, 2023, 20:06 [IST]
Other articles published on Oct 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+