Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் பால்ல இருந்து மரண அடி.. வங்கதேசத்துக்கு ஆப்பு வைக்கப் போகும் அதிரடி வீரர்.. ரோஹித் வியூகம்!

Recommended Video

shivam dube to debut against bangladesh in first t20| அறிமுக வீரரை வைத்து ரோஹித் போடும் திட்டம்

டெல்லி : வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியில் இளம் வீரர் சிவம் துபே அறிமுகம் ஆக உள்ளார்.

போட்டிக்கு முன்னதாக பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, அணியில் நிச்சயம் ஒரு இளம் வீரருக்கு வாய்ப்பு உண்டு என கூறிய நிலையில், அது இவர் தான் என கூறப்படுகிறது.

இவர் டி20 போட்டிகளில் அதிரடியாக ஆடுவார் என்பதாலேயே அணியில் வாய்ப்பு பெற இருக்கிறார்.

இந்தியா - வங்கதேசம் டி20

இந்தியா - வங்கதேசம் டி20

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. முதல் டி20 போட்டி டெல்லியில் இன்று துவங்குகிறது. இந்திய அணியில் நிச்சயம் ஒரு இளம் வீரருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என கேப்டன் ரோஹித் சர்மா கூறி இருக்கிறார்.

முக்கிய வீரர்கள் இல்லை

முக்கிய வீரர்கள் இல்லை

இந்த தொடரில் கேப்டன் விராட் கோலி ஓய்வு பெற்றுள்ள நிலையில் துணை கேப்டன் ரோஹித் சர்மா அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல, வங்கதேச அணியிலும் ஷகிப் அல் ஹசன், தமிம் இக்பால் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம் பெறவில்லை.

ஹர்திக் பண்டியா காயம்

ஹர்திக் பண்டியா காயம்

இந்திய அணியில் காயம் காரணமாக ஹர்திக் பண்டியா இடம் பெறவில்லை. ஜடேஜாவும் நீக்கப்பட்டார். அதனால், இந்திய அணியில் நிச்சயம் மாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சிவம் துபே சேர்ப்பு

சிவம் துபே சேர்ப்பு

ஹர்திக் பண்டியா இல்லாத நிலையில், அவரைப் போன்ற ஒரு அதிரடி ஆல் - ரவுண்டர் அணிக்கு தேவை என்பதை கருத்தில் கொண்டு சிவம் துபே என்ற இளம் வீரர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சஞ்சு சாம்சன் நிலை

சஞ்சு சாம்சன் நிலை

விராட் கோலி இல்லாத நிலையில், மாற்று வீரராக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டார். எனினும், இவர்கள் இருவரில் ஒருவருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை இருந்தது.

ஆல் ரவுண்டர்

ஆல் ரவுண்டர்

சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற நிலையில், சிவம் துபே ஆல் - ரவுண்டராக செயல்படுவார். வேகப் பந்துவீச்சு மற்றும் அதிரடி பேட்ஸ்மேனாக இருப்பார். அணியில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக இருக்கும் நிலையில், ஆல் - ரவுண்டர் சிவம் துபே வாய்ப்பு பெற்றார்.

அனுபவம் குறைவு

அனுபவம் குறைவு

சிவம் துபேவுக்கு அனுபவம் குறைவு. அதே போல, அவரது பந்துவீச்சு ஹர்திக் பண்டியா அளவுக்கு இருக்காது. எனினும், அவரது அதிரடி ஆட்டம் அணிக்கு தேவையாக இருந்தது.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

பகுதி நேரமாக ஒரீரு ஓவர்கள் இவருக்கு அளித்து விட்டு, முழுமையான பேட்ஸ்மேனாக இவரை பயன்படுத்த வியூகம் அமைத்து இருக்கிறார் கேப்டன் ரோஹித் சர்மா. வங்கதேச அணி இவரை சமாளிக்க தடுமாறும் என்பதே இந்திய அணியின் கணிப்பாக இருக்கிறது.

மரண அடி பில்டப்

மரண அடி பில்டப்

சிவம் துபே உள்ளூர் அரங்கில் அதிரடியாக ஆடுவார் என்ற பெயர் உள்ளது. சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே தொடரில் அதிரடியாக இரட்டை சதம் அடித்து மிரட்டி இருந்தார். அப்போதிருந்தே இவர் முதல் பந்தில் இருந்தே அடித்து ஆடுவார் என்ற பில்டப் கொடுக்கப்படுகிறது. முதல் டி20யில் சாதித்துக் காட்டுவாரா சிவம்?

Story first published: Sunday, November 3, 2019, 11:26 [IST]
Other articles published on Nov 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+