டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பயிற்சி ஆட்டத்தில் நேற்று இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொண்டு 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் சில குறைகள் இருக்கின்றது. அது என்னவென்று தற்போது பார்க்கலாம்.

இந்திய அணியில் நேற்றைய ஆட்டத்தில் பல பிளஸ் பாயிண்ட் இருந்தாலும் சில மைனஸ் பாயிண்ட்டுகள் இருக்கின்றது. அதாவது தொடக்க வீரர்கள் மற்ற அணிகளை போல் அதிரடியாக விளையாடாமல் சற்று தடுமாறினார்கள். குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா 19 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 23 ரன்கள் சேர்த்தார். இதில் அவர் ஸ்ட்ரைக் ரேட் 121 என்ற அளவில் இருந்தது.
இதேபோன்று சஞ்சு சாம்சனும் தமக்கு கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்டார். அவர் ஆறு பந்துகளில் ஒரு ரன் மட்டுமே சேர்த்தார். நேற்று முதல் சில பந்துகளை எதிர்கொள்ள ரோகித் சர்மா தடுமாறியது கொஞ்சம் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதேபோன்று சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரராக விளங்கிய சிவம் துபே பயிற்சி ஆட்டத்திலும் தடுமாறினார்.
சிஎஸ்கேவுக்காக விளையாடும் போது நடு வரிசையில் அதிரடியாக விளையாடி ரன்கனை சேர்த்தார். ஆனால் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதிலிருந்து சிவம்
துபேவின் ஆட்டம் பாதிக்கப்பட்டிருக்கிறது. சிவம் துபேவை நம்பி இந்திய அணி நடுவரிசையில் களம் இறங்கினாலும் அவர் நேற்றைய ஆட்டத்தில் தடுமாறினார்.
அது இந்திய அணியின் ஸ்கோரை வெகுவாக பாதிக்கும். இதேபோன்று இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ஜடேஜா பிளேயிங் லெவனில் முக்கிய வீரராக இருக்கப் போகிறார். இந்த சூழலில் ஜடேஜா நேற்று பேட்டிங்கில் கடுமையாக தடுமாறினார். எதிர்கொண்ட 6 பந்தில், ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியாமல் திணறினார். இதனால் இந்திய அணிக்கான ஃபினிஷிங் ரோலில் ஜடஜாவின் பங்கு என்ன என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.