Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை- பெரிய பொறுப்பை கொடுத்த ரோகித்.. மீண்டும் சொதப்பிய சஞ்சு சாம்சன்

நியூயார்க் : ஐசிசி t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் இரண்டாம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் இந்திய அணி தொடருக்கு தயாராகும் விதமாக வங்கதேசத்துக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றது.

இதில் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். நியூயார்க் மைதானத்தில் முதன்முறையாக இந்திய அணி விளையாடுகிறது. இங்குதான் அயர்லாந்து, பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய ஆட்டங்கள் நடைபெறுகிறது.

T20 world cup ind vs ban warm up matches sanju samson virat kohli rcb rohit sharma hardik pandya bcci india national cricket team 20


இதனால் இந்த மைதானம் எவ்வாறு செயல்பட போகிறது என்பதை அறிந்து கொள்ள இந்திய ரசிகர்களும், இதில் எப்படி விளையாட வேண்டும் என இந்திய வீரர்களும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தனர். இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் நட்சத்திர வீரர் விராட் கோலி பங்கேற்கவில்லை.

இதன் காரணமாக அதிரடி வீரர் சஞ்சு சாம்சனுக்கு தொடக்க வீரராக ரோகித் சர்மா வாய்ப்பு வழங்கினார் நடப்பு ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார்.இதன் காரணமாக ஜெய்ஸ்வாலுக்கு பதில் சஞ்சு சாம்சனுக்கு முன்னூரிமை வழங்கப்பட்டது. இதில் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடினால் அவருக்கு தொடக்க வீரராக வாய்ப்பு வழங்கலாம் என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஆனால் சஞ்சு சாம்சன் மீண்டும் தமக்கு கிடைத்த வாய்ப்பை வீணடித்தார். ஆறு பந்துகளை எதிர்கொண்ட சஞ்சு சாம்சன் ஒரே ஒரு ரன் மட்டும்தான் அடித்தார். இதன் மூலம் தமக்கு கிடைத்த வாய்ப்பை சஞ்சு சாம்சன் வீணடித்தார். சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அதை அவர் சரியாக பயன்படுத்தவில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

சாம்சன் தொடக்க வீரராக களம் இறங்கினால் நடு வரிசையில் சிவம் துபே ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கப்படும். இந்த நிலையில் வங்கதேசத்துக்கு எதிராக கூட சரியாக விளையாடாமல் தமக்கு கிடைத்த வாய்ப்பை சஞ்சு வீணடித்து விட்டதாக ரசிகர்கள் அவரை கடுமையாக சாடி வருகின்றனர்.
Story first published: Saturday, June 1, 2024, 21:12 [IST]
Other articles published on Jun 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+