Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs BAN: ரொம்ப நம்பினோம் ஆனால் ஏமாற்றிவிட்டார்.. ஆர்சிபி வீரரை வீட்டுக்கு அனுப்பிய ரோஹித்

மும்பை: வங்கதேச டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வாய்ப்பு பெற்று இருந்த ரஜத் படிதார் தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் அணியில் இடம் பெறவில்லை. அவர் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக சிறப்பாக ஆடிய ரஜத் படிதார் தேசிய அளவில் கவனம் பெற்று இருந்தார்.

அவர் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளிலும் சில போட்டிகளில் சிறப்பாக ஆடி இருந்த நிலையில் அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரஜத் படிதார் வாய்ப்பு பெற்றார். அப்போது அவரைக் காட்டிலும் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ரன் குவித்து இருந்த சர்ஃபராஸ் கானை பின் தள்ளிவிட்டு ரஜத் படிதாருக்கு இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் வாய்ப்பு அளித்தார் கேப்டன் ரோஹித் சர்மா.

ind vs ban india rohit sharma

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் ஆடிய ரஜத் படிதார் மிக மோசமான செயல்பாட்டை அளித்திருந்தார். 6 இன்னிங்ஸ்களில் வெறும் 63 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். இதை அடுத்து அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 59 உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ரஜத் படிதார் அதில் 4120 ரன்கள் எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 43 ஆகும். இது குறைவான பேட்டிங் சராசரி தான் என்றாலும் அவர் ரஞ்சி டிராபி நாக் அவுட் போட்டிகளில் சிறப்பாக ஆடியதை அடுத்து இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர் மீது கேப்டன் ரோஹித் சர்மா அதிக நம்பிக்கை வைத்து வாய்ப்பு அளித்தார். சர்ஃபராஸ் கான் அவரை விட அதிக பேட்டிங் சராசரி வைத்து இருந்தார். ஆனாலும், அவரைக் காட்டிலும் ரஜத் படிதாரை நம்பினார் கேப்டன் ரோஹித் சர்மா.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ரஜத் 32 மற்றும் 9 ரன்கள் எடுத்தார். இரண்டாவது போட்டி மற்றும் மூன்றாவது போட்டியில் தலா ஒரு முறை டக் அவுட் ஆனார். 3 போட்டிகளில் 6 இன்னிங்ஸ்களில் மொத்தம் 63 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். தொடர்ந்து மூன்று போட்டிகளில் வாய்ப்பு அளித்தும் அவர் மோசமாக செயல்பட்டதை அடுத்து இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் ஐந்தாவது போட்டியிலேயே அவருக்கு அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

அதை தொடர்ந்து தற்போது வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவருக்கு இந்திய அணியில் இடம் அளிக்கப்படவில்லை. அதே சமயம் அவருக்கு அடுத்து இந்திய அணியில் வாய்ப்பு பெற்று, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்த சர்ஃபராஸ் கானுக்கு வங்கதேச டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் அளிக்கப்பட்டு உள்ளது. அவர் 5 இன்னிங்ஸ்களில் 200 ரன்கள் சேர்த்திருந்தார். அவர் மூன்று அரை சதங்கள் அடித்து இருந்தார். அவரது டெஸ்ட் போட்டி சராசரியும் தற்போது 50 ஆக உள்ளது. சர்ஃபராஸ் கான் வங்கதேச டெஸ்ட் தொடரில் போட்டிகளில் களம் இறங்குவது சந்தேகம் தான் என்றாலும் அணியில் மாற்று வீரராக இடம் பெற்று இருக்கிறார்.

Story first published: Monday, September 9, 2024, 8:26 [IST]
Other articles published on Sep 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+