Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படி ஆயிடுச்சே! உம்ரான் மாலிக்கிற்கு அறுவை சிகிச்சை.. ஒரு வருடம் கிரிக்கெட் விளையாட முடியாது

மும்பை: இந்திய கிரிக்கெட்டில் ஏதாவது ஒரு பந்துவீச்சாளர் 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசினால் அவரை ஒரே நாளில் சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் பாவித்து விடுவார்கள். ஏனென்றால் இந்திய பவுலர்கள் அதிகபட்சமாகவே 130 அல்லது 135 கிலோமீட்டர் வேகத்தில் தான் பந்து வீசுவார்கள்.

இந்த சூழலில் வருண் அரோண் சிவம் துபே போன்ற வீரர்கள் அபாரமாக 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி பிரபலம் அடைந்தார்கள். இதில் அனைவரையும் தூக்கி சாப்பிட்டவர் என்றால் அது உம்ரான் மாலிக் தான்.

ind vs ban umran malik

காஷ்மீர் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த உம்ரான் மாலிக் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடிய வீரராக திகழ்ந்தார். இவ்வளவு நாள் உம்ரான் மாலிக் எங்கு இருந்தார் என்று ரசிகர்கள் தூக்கிக் கொண்டாடினர். உம்ரான் மாலிக் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடினார். ஆனால் அவருக்கு அடிக்கடி காயம் ஏற்பட்டது.

இதனால் முன்பு போல் அவரால் ஆக்ரோஷமாக பந்து வீச முடியவில்லை. அப்படி பந்து வீசினாலும் அது கண்ட்ரோல் இல்லாமல் செல்வதால் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க சாதகமான சூழல் ஏற்படுகிறது. இந்த நிலையில் உம்ரான் மாலிக் இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இந்த சூழலில் துலீப் கோப்பை தொடரில் உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்ட நிலையில் அவருக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது.

இதனால் அவர் தொடரில் இருந்து விலகினார். இந்த நிலையில் உம்ரான் மாலிக்கின் காயம் குணமடைய வேண்டும் என்றால் அவர் இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். இதன் காரணமாக உம்ரான் மாலிக் தற்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளார்.

இதனால் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து உம்ரான் மாலிக் விலகி இருக்கிறார். இனி அடுத்த ஒரு வருடத்திற்கு உம்ரான் மாலிக்கால் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில் ஐபிஎல் தொடருக்குள் தன்னுடைய உடல் தகுதியை எட்ட வேண்டும் என்ற உத்வேகத்தில் உம்ரான் மாலிக் தயாராகி வருகிறார்.

அறுவை சிகிச்சை முடித்துவிட்டு மூன்று மாதத்திற்குள் மீண்டும் பந்து வீச வேண்டும் என்ற காலக்கெடுவை சுயமாகவே உம்ரான் மாதிரி போட்டு கொண்டிருக்கிறாராம். இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு திரும்பி களத்திற்கு வந்து பந்து வீசுவது என்பது அசாதாரணமான விஷயமாகும். இதனால் உம்ரான் மாலிக் பழைய மாதிரி பந்து வீச முடியுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Sunday, October 6, 2024, 16:38 [IST]
Other articles published on Oct 6, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+