For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலி மாபெரும் சாதனை! சச்சின் ரெக்கார்டை முறியடித்து அபாரம்..கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிரடியாக விளையாடி முன்னிலை பெற்று வருகிறது. மழையால் இரண்டு நாள் ஆட்டம் தடைப்பட்ட நிலையில், முதலில் இந்தியா களமிறங்கியிருக்கிறது.

முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 233 ரன்களுக்கு ஆட்டம் இழக்க இந்திய அணி தற்போது தங்களுடைய முதல் இன்னிங்சை அதிரடியாக விளையாடி வருகிறது. முதல் பத்து ஓவர்களில் எல்லாம் நூறு ரன்களை கடந்து இந்தியா விளையாடி வருகிறது.

ind vs ban virat kohli kanpur test cricket rohit sharma

இந்த சூழலில் விராட் கோலி இன்றைய ஆட்டத்தில் ஐந்தாவது வீரராக களம் இறங்கினார். கோலியை விட பண்ட் அதிரடியாக ஆடுவார் என அவருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. ஆனால் இந்த நிலையில் விராட் கோலி இன்றைய ஆட்டத்தில் 30 ரன்களை கடந்த போது சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 27,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்.

இதற்கு முன்பு 27 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை சச்சின் டெண்டுல்கர் 623 இன்னிங்சில் தொட்டார். ஆனால் தற்போது விராட் கோலி வெறும் 594 இன்னிங்சில் அதிவேகமாக 27 ஆயிரம் ரன்களை கடந்து அசத்தி இருக்கிறார். தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி நான்காம் இடத்தில் இருக்கிறார். முதலிடத்தில் சச்சின் 34 ஆயிரத்து 357 ரன்கள் உடன் இருக்கின்றார்.

இரண்டாவது இடத்தில் இலங்கை வீரர் சங்ககாரா 28016 ரன்களுடன் இருக்கிறார். மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் 27,483 ரன்களுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். தற்போது ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு வெறும் 484 ரன்கள் தான் தேவைப்படுகிறது. அதனை விராட் கோலி இந்த ஆண்டுக்குள்ளே முறியடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

இதேபோன்று சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 9000 ரன்களைக் கடந்து விராட் கோலி மற்றொரு சாதனையை படைத்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த மைல்கல்லை எட்டிய நான்காவது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கிறார். எனினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த மைல்கல்லை விராட் கோலி மெதுவாக தான் எட்டி இருக்கிறார்.டிராவிட் 176 இன்னிங்சிலும், சச்சின் 179 இன்னிங்சிலும், கவாஸ்கர் 192 இன்னிங்சிலும் எட்டிய நிலையில் விராட் கோலி 194 இன்னிங்ஸில் தான் 9000 ரன்களை கடந்து இருக்கிறார்.

Story first published: Monday, September 30, 2024, 16:24 [IST]
Other articles published on Sep 30, 2024
English summary
Ind vs Ban - Virat kohli became the fastest Player to reach 27000 runs in international cricket விராட் கோலி மாபெரும் சாதனை! சச்சின் ரெக்கார்டை முறியடித்து அபாரம்..கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+