Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மோசமான பேட்டிங்.. ஆனாலும் பிரம்மாண்ட சாதனை படைத்த விராட் கோலி.. சச்சின் வரிசையில் இணைந்த கிங்!

சென்னை: வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 6 மற்றும் 17 ஆகிய ரன்களில் ஆட்டமிழந்த போதும், பிரம்மாண்ட சாதனையை படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் 12 ஆயிரம் ரன்களை விளாசிய 5வது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி 2வது நாள் ஆட்டம் நேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 81 ரன்கள் சேர்த்திருக்கிறது. இதன் மூலமாக 308 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்றே சொல்லலாம். நாளைய ஆட்டத்தில் கூடுதலாக 150 ரன்கள் சேர்ப்பதே இந்திய அணியின் இலக்காக இருக்கும்.

ind vs ban virat kohli sachin tendulkar

இன்றைய ஆட்டத்தில் நட்சத்திர வீரர் விராட் கோலி மீண்டும் தனது ஃபார்முக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மெஹதி ஹசன் பவுலிங்கில் எல்பிடபிள்யூ முறையில் 17 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் அல்ட்ரா எட்ஜ் டெக்னிக்கை பயன்படுத்தி ரீபிளேவில் பார்த்த போது, விராட் கோலி பேட்டில் பட்டு இன்சைட் எட்ஜாகி பேடில் அடித்தது தெரிய வந்தது.

டிஆர்எஸ் எடுத்திருந்தால் விராட் கோலி 2வது நாள் ஆட்டத்தை சிறப்பாக முடித்திருப்பார். ஆனால் சுப்மன் கில்லின் வார்த்தையை நம்பி, விராட் கோலி பெவிலியன் திரும்பினார். இதனால் ரசிகர்கள் பலரும் சுப்மன் கில்லை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் விராட் கோலி பெரிய ஸ்கோரை பதிவு செய்யவில்லை.

முதல் இன்னிங்ஸில் 6 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 17 ரன்களும் மட்டுமே சேர்த்திருக்கிறார். இருந்த போதும் விராட் கோலி மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். 2வது இன்னிங்ஸில் 6 ரன்கள் சேர்த்த போது, சர்வதேச கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் 12 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். 243 இன்னிங்ஸ்களில் விளையாடி 12,012 ரன்களை விராட் கோலி குவித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 313 இன்னிங்ஸ்களில் 42 சதங்கள், 70 அரைசதங்கள் உட்பட 14,192 ரன்கள் விளாசி முதல் இடத்தில் இருக்கிறார். தொடர்ந்து ரிக்கி பாண்டிங் 308 இன்னிங்ஸ்களில் 36 சதங்கள், 70 அரைசதங்கள் உட்பட 13,117 ரன்களை விளாசி 2வது இடத்திலும், ஜாக் காலிஸ் 282 இன்னிங்ஸ்களில் 29 சதங்கள், 75 அரைசதங்கள் உட்பட 12,305 ரன்களையும் சேர்த்து 3வது இடத்தில் இருக்கிறார்.

அதேபோல் குமார சங்கக்காரா 270 இன்னிங்ஸ்களில் 26 சதங்கள், 60 அரைசதங்கள் உட்பட 12,043 ரன்களையும் விளாசி 4வது இடத்திலும், விராட் கோலி 243 இன்னிங்ஸ்களில் விளையாடி 38 சதங்கள், 59 அரைசதங்கள் உட்பட 12,012 ரன்களுடன் 5வது இடத்தில் இருக்கிறார். அதேபோல் அடுத்த போட்டியில் விராட் கோலி இன்னொரு சாதனையை படைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி 9 ஆயிரம் ரன்களை விளாசுவதற்கு இன்னும் 129 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. வங்கதேசம் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் நடக்கவுள்ளதால், அந்த போட்டியில் சதம் விளாசி விராட் கோலி தனது ஸ்டைலில் 9 ஆயிரம் ரன்களை விளாசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, September 20, 2024, 20:23 [IST]
Other articles published on Sep 20, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+