Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டான் பிராட்மேன் சாதனையை முறியடிக்க போகும் விராட் கோலி.. டெஸ்டில் 5 ஆண்டுகளாக சிக்கி தவிக்கும் கிங்

மும்பை : வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 27 ஆம் தேதி கான்பூர் நகரில் நடைபெறுகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருக்கிறது. எட்டு மாதங்களுக்குப் பிறகு சர்வதேச டெஸ்ட் அரங்கத்திற்கு திரும்பிய விராட் கோலி முதல் இன்னிசை 6 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 17 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

இந்த நிலையில் நடுவரின் தவறான முடிவின் காரணமாக விராட் கோலி இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது தெரியவந்தது. இந்த சூழலில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி பெரிய சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி தற்போது 114 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 29 டெஸ்ட் சதம் அடித்திருக்கிறார்.

ind vs ban india vs bangladesh cricket rohit sharma virat kohli

இந்த நிலையில் விராட் கோலி இன்னும் ஒரு சதம் அடித்தால் கிரிக்கெட் பிதாமகன் என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் டான் பிராட்மேனின் சாதனையை விராட் கோலி முறையடித்து விடுவார். பிராட்மேன் 52 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 29 சதம் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை போல் அதிவேகமாக இவ்வளவு சதம் அடித்த சாதனையை இன்னும் யாராலும் முறியடிக்க முடியவில்லை.

இந்த சூழலில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இன்னும் விராட் கோலி ஒரு சதம் அடித்தால் 16-வது இடத்திற்கு முன்னேறி விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் விராட் கோலி கடந்த ஜூலை 2023 ஆம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. அவர் கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் ஒரு சதம் அடித்து இருந்தார்.

அதன் பிறகு விராட் கோலி ஒரே ஒரு அரைசதம் தான் அடித்துள்ளார். இன்னும் சொல்லப்போனால் ஒருநாள் டி 20 கிரிக்கெட்டில் பட்டையை கிளப்பிய விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வருகிறார். ஜோ ரூட்ழ் கேன் வில்லியம்சன், ஸ்மித் போன்ற வீரர்கள் டெஸ்டில் சதம் சதமாக அடித்து வரும் நிலையில், விராட் கோலி பின்தங்கி இருக்கிறார். இதற்கு காரணம் கடந்த ஐந்து ஆண்டுகளில் விராட் கோலி வெறும் இரண்டு சதம் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்து இருக்கிறார்.

இதற்கு முன்பு நவம்பர் 2019 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக ஒரு சதமும் அதன் பின் மார்ச் 2023 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு சதமும் ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் எதிராக ஒரு சதமும் தான் விராட் கோலி அடித்து இருந்தார். இதனால் விராட் கோலி மற்ற வீரர்களை முந்த வேண்டுமென்றால் இனி அடுத்தடுத்து சதங்கள் அடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, September 25, 2024, 21:09 [IST]
Other articles published on Sep 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+