Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ராசியான மைதானம் போல.. புனேவில் விராட் கோலி செய்த தரமான சம்பவம்.. 8 இன்னிங்ஸும் டாப் கிளாஸ்!

புனே: புனே மைதானத்தில் இந்திய அணியின் விராட் கோலி விளையாடியுள்ள 8 இன்னிங்ஸில் 3 சதம், 3 அரைசதம் உட்பட 551 ரன்களை குவித்துள்ளார்.

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 97 பந்துகளில் 103 ரன்களை விளாசி அசத்தினார். ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி அடிக்கும் 48வது சதம் இதுவாகும். அதேபோல் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் மொத்தமாக சேர்த்து 78வது சதமாகும்.

IND vs BAN: Virat Kohli scored 551 runs in just 8 innings at Pune MCA Stadium in his Cricket career

அதேபோல் கடந்த செப்டம்பர் மாதத்திற்கு பின் இதுவரை விராட் கோலி 8 சதத்தை விளாசி இருக்கிறார். இதனால் விரைவில் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸ்களில் 26 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

அதேபோல் தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் வீரர் ஜாக் காலிஸின் அதிக அரைசதங்கள் சாதனையையும் விராட் கோலி முறியடித்தார். அதுமட்டுமல்லாமல் புனே மைதானத்தில் புனே மைதானத்தில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலிலும் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். இதுவரை புனே மைதானத்தில் 8 இன்னிங்ஸ்களில் விராட் கோலி விளையாடியுள்ளார்.

அதில் 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 61 ரன்களும், 2017ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 122 ரன்களும், 2017ல் நியூசிலாந்துக்கு எதிராக 29 ரன்களும், 2018ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 107 ரன்களும், 2021ல் இங்கிலாந்துக்கு எதிராக 56 ரன்களும், மீண்டும் இங்கிலாந்து அணிக்கு எதிராக 66 ரன்களும், மீண்டும் இங்கிலாந்துக்கு எதிராக 7 ரன்களும் எடுத்துள்ளார். நேற்றைய ஆட்டத்தில் 103 ரன்கள் விளாசியுள்ளார்.

இதன் மூலம் புனே மைதானத்தில் விராட் கோலி விளையாடியுள்ள 8 இன்னிங்ஸ்களில் 551 ரன்களை விளாசி அசத்தி இருக்கிறார். இதனால் விராட் கோலிக்கு புனே மைதானம் ராசியான மைதானம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் உலகக்கோப்பை தொடரில் 8 ஆண்டுகளுக்கு பின் விராட் கோலி சதம் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, October 20, 2023, 11:43 [IST]
Other articles published on Oct 20, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+