Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

18 மாதங்களுக்கு பிறகு இந்திய அணிக்காக விளையாடிய ரிஷப் பண்ட்.. பயிற்சி ஆட்டத்தில் சரவெடி

மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் ரிஷப் பண்ட்க்கு சாலை விபத்து ஏற்பட்டது.

இதில் உயிர் பிழைத்து வந்த ரிஷப் பண்ட், 18 மாதங்களுக்குப் பிறகு தற்போது இந்திய அணிக்காக முதன்முறையாக விளையாடினார். பந்த் 2023 உலக கோப்பை இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஆக போட்டிகளில் காயம் காரணமாக விளையாட மட்டும் இருந்தாலும் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி தன்னுடைய உடல் தகுதியை நிரூபித்தார்.

T20 world cup ind vs ban warm up match rishabh pant sanju samson virat kohli rcb rohit sharma hardik pandya bcci india national cricket team 20


இதனால் இந்திய டி20 அணியில் ரிஷப் பண்ட்க்கு இடம் வழங்கப்பட்டது. வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதில் சஞ்சு சாம்சன் 1 ரன்னில் ஆட்டம் இழக்க இந்திய அணி 11 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்தது.

இதனை அடுத்து மூன்றாவது வீரராக ரிஷப் பன்ட் களம் இறங்கி எடுத்ததிலிருந்து அதிரடியாக விளையாடினார். வங்கதேச பவுலர்களின் பந்துவீச்சை சிக்சர் பவுண்டரி என ரிஷப் பண்ட் விரட்ட இந்திய அணியின் ஸ்கோர் மலவென உயர்ந்தது. பண்ட் 32 பந்துகளை எதிர் கொண்டு நான்கு பவுண்டரி, நான்கு சிக்சர் என 53 ரன்கள் எடுத்தார்.

இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 165 என்ற அளவில் இருந்தது. எனினும் இது பயிற்சி ஆட்டம் என்பதால் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என கருதி பண்ட் உடனடியாக ரிட்டயர் அவுட் ஆகி பெவிலியன் சென்றார். ரிஷப் பண்டின் இந்த அதிரடி ஆட்டம் இந்திய ரசிகர்களுக்கு மனநிறைவை கொடுத்திருக்கிறது.

கடந்த டி20 உலக கோப்பையில் ரிஷப் பண்ட்க்கு பதிலாக தினேஷ் கார்த்திக் தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அது பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில் ரிஷப் பண்ட் பயிற்சி ஆட்டத்திலிருந்து அதிரடியாக விளையாடுவதால் இந்த உலகக் கோப்பையில் அவருடைய பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

Story first published: Saturday, June 1, 2024, 21:39 [IST]
Other articles published on Jun 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+