Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: ராகுல், ஜடேஜாவுக்கு முன் 5வது இடத்தில் களமிறங்கியது ஏன்? அக்சர் பட்டேல் விளக்கம்

நாக்பூர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 68 பந்துகள் எஞ்சிய நிலையில் இந்திய அணி வெற்றி பெற்றது. 249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது.

இதில் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க செய்வார். அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்த நிலையில் பெவிலியன் திரும்பினார். இந்த நிலையில் கே எல் ராகுல், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா போன்ற பேட்ஸ்மேன்கள் இருந்த போது கம்பீர் அக்சர் பட்டேலை ஐந்தாவது வீரராக பேட்டிங் வரிசையில் ப்ரோமோஷன் கொடுத்தார்.

ind vs eng rohit sharma axar patel virat kohli champions trophy 2025


இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அக்சர் பட்டேல் 47 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார்.இதில் ஆறு பவுண்டரி,ஒரு சிக்சர் அடங்கும். ஏற்கனவே பந்துவீச்சில் அக்சர் பட்டேல் ஏழு ஓவர் வீசி 38 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

இந்த நிலையில் தாம் நடுவரிசையில் களமிறக்கப்பட்டது ஏன் என்பது குறித்த அக்சர் பட்டேல் விளக்கம் அளித்துள்ளார். அதில்,"நான் ஐந்தாவது வீரராக இன்று ஆட்டத்தில் களமிறங்க போகிறேன் என்று முன்பே தெரியும். ஏனென்றால் களத்தில் வலது கை பேட்ஸ்மேன்களும், இடது கை பேட்ஸ்மேன்களும் இருக்கும் படி பேட்டிங் வரிசையை அமைக்க வேண்டும் என கேப்டனும் பயிற்சியாளரும் முடிவு எடுத்திருந்தார்கள்".

"வேகப் பந்துவீச்சாளர்கள் வீசிய பந்து பேட்டிற்கு நன்றாக வந்தது. இதனால் அவர்கள் ரன்கள் குவித்தனர். இதனால் தான் ரோகித் சர்மா சுழற்பந்துவீச்சை மாற்றினார். எனினும் சிலர் பந்துவீச்சாளர்களும் முதலில் கொஞ்சம் ரன்களை விட்டுக் கொடுத்தோம். இங்கிலாந்து வீரர்களுக்கு இதற்கான பாராட்டுகளை தெரிவித்தே ஆக வேண்டும்".

"அணியில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் இருந்தோம். இதனால் எப்படி பந்து வீச வேண்டும் என்பது குறித்து ஏற்கனவே திட்டமிட்டோம். பேட்ஸ்மேன்களை தவறு செய்ய வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் பந்து வீசினோம். அதற்கு பலனும் கிடைத்தது. இன்று இங்கிலாந்து வீரர்கள் பந்தில் வேகத்தை மாற்றி வீசினார்கள். இதை நாங்களும் செய்திருந்தால் பந்து நன்றாக Turn ஆகியிருக்கும்".

"கில்லுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து பேட்டிங் செய்யும்போது, நாங்கள் பெரிய அளவில் எதுவும் யோசிக்கவில்லை. எந்த பவுலர்களை குறி வைத்து அடிக்கலாம் என்பது குறித்து தான் பேசினோம். எங்களுடைய பார்ட்னர்ஷிப் மிகவும் முக்கியமாக இருந்தது. ஏனென்றால் புதிய பேட்ஸ்மேன்கள் களத்திற்கு வந்தால், நிச்சயம் ஆடுகளத்தின் தன்மையால் தடுமாறி இருப்பார்கள்" என்று அக்சர் பட்டேல் கூறியுள்ளார்.

Story first published: Thursday, February 6, 2025, 21:14 [IST]
Other articles published on Feb 6, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+