For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs ENG: ரோஹித் மட்டும் இதை செய்தால்.. புதிய ரெக்கார்டு.. சச்சின், கோலி மட்டுமே செய்த சாதனை

நாக்பூர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ரோஹித் சர்மா தனது ஃபார்மை மீட்டால் மிகப்பெரிய கிரிக்கெட் சாதனை செய்யும் வாய்ப்பை பெறுவார். இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா தற்போது 11 வது இடத்தில் இருக்கிறார்.

அவர் 524 இன்னிங்ஸ்களில் விளையாடி 48 சதங்களை அடித்து இருக்கிறார். இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆட உள்ள இந்த மூன்று போட்டிகளில் அவர் இரண்டு சதங்களை அடித்தால் டேவிட் வார்னரை முந்தி இந்த பட்டியலில் பத்தாவது இடத்தை பெறுவார். ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 49 சர்வதேச சதங்களை அடித்து இருக்கிறார்.

ind vs eng india rohit sharma

ரோஹித் சர்மா இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 12 சதங்களையும், ஒருநாள் போட்டிகளில் 31 சதங்களையும், டி20 போட்டிகளில் 5 சதங்களையும் அடித்து இருக்கிறார். அதிக சர்வதேச சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார் ரோஹித் சர்மா. இந்திய அளவில் சச்சின் மற்றும் கோலி மட்டுமே 50 சர்வதேச சதங்களை அடித்து உள்ளனர். ரோஹித் இரண்டு சதங்கள் அடித்தால் அந்த மைல்கல்லை எட்டிய மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை பெறுவார்.

இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 100 சதங்களுடன் முதல் இடத்திலும், விராட் கோலி 81 சதங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இவர்கள் இருவரும் அதிக சர்வதேச சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் உலக அளவிலும் முதல் இரண்டு இடங்களில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ரிக்கி பாண்டிங் 71 சதம், குமார் சங்கக்காரா 63 சதங்கள், ஜாக்கஸ் காலிஸ் 62 சதங்கள் அடித்து மூன்று, நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளனர். அடுத்த இடங்களில் உள்ள ஹஷிம் அம்லா 55 சதங்கள், ஜெயவர்த்தனை 54 சதங்கள், பிரையன் லாரா 53 சதங்கள், ஜோ ரூட் 52 சதங்கள் ஆகியோரின் சாதனைகளை அடுத்து நடக்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முறியடிக்க ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு உள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள்; தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் அதிகபட்சம் ஐந்து போட்டிகளில் அவர் விளையாட வாய்ப்பு உள்ளது. ஆனால் ரோஹித் சர்மா மொத்தமாக எட்டு சதங்களை அடித்தால் மட்டுமே இந்தப் பட்டியலில் ஆறாவது இடத்தை பிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, February 6, 2025, 10:47 [IST]
Other articles published on Feb 6, 2025
English summary
IND vs ENG 1st ODI: Rohit Sharma can surpass 50 century record in International cricket
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+