Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆட்டமிழப்பு.. முதல் டெஸ்டில் இந்தியா அபார பந்துவீச்சு

ஐதராபாத் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் இன்று தொடங்கியது.

பேஸ் பால் எனப்படும் அதிரடியாக விளையாடக்கூடிய யுத்தியை கடைப்பிடித்து இங்கிலாந்து அணி முதல் முறையாக இந்தியாவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. இதனால் இந்த போட்டி மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்தது.

IND VS ENG 1st Test - England all out for 246 runs as Indian bowlers performed well

எனினும் இந்திய அணி பந்துவீச்சை எதிர்கொண்ட இங்கிலாந்து அணி அதிரடியாக ஆடி ரன் குவித்தாலும்,விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தது. முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணியில் தொடக்கவீரர் ஜாக் கிராலி மற்றும் பென் டக்கட் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

இந்த ஜோடி பத்து ஓவர்களை கடந்த நிலையில் 50 ரன்கள் சேர்த்தது. எனினும் இதன் பிறகு சுழற் பந்துவீச்சை ரோகித் சர்மா அறிமுகப்படுத்தியவுடன் இங்கிலாந்து அணி பேட்டிங் வரிசை சரிவை நோக்கி சென்றது. ஜாக் கிராலி 20 ரன்களில் ஆட்டமிழக்க பென் டக்கட் 35 ரன்களில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆலிவ் போப் 1 ரன்னிலும், ஜோ ரூட் 29 ரன்களிலும், ஜானி பாரிஸ்டோ 37 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி சரிவை நோக்கி சென்றது. அப்போது பென் ஸ்டோக்ஸ் மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்க்க பென் ஸ்டோக்ஸ் நான்கு ரன்களிலும் ரெஹான் அஹமத் 13 ரன்களிலும்,டாம் ஹார்ட்லி 23 ரன்களிலும் மார்க் வுட் 11 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.

ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி தடுமாறிய நிலையில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மட்டும் பேட்டிங்கில் அதிரடியை காட்டி 70 ரன்களை சேர்த்தார். இதனால் இங்கிலாந்து அணி 246 என்ற கௌரவமான இலக்கை எட்டியது. இந்திய பந்துவீச்சு தரப்பில் அஸ்வின் ஜடேஜா தலா மூன்று விக்கெட்டுகளையும் அக்சர் பட்டேல் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதனை அடுத்து இந்திய அணி தற்போது முதல் இன்னிங்ஸ் விளையாடி வருகிறது.

Story first published: Thursday, January 25, 2024, 15:18 [IST]
Other articles published on Jan 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+