Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்து பிளேயிங் XI அறிவிப்பு.. சீனியர் வீரருக்கு ஆப்பு.. 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கும் ஸ்டோக்ஸ்

ஐதராபாத் : இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை ஐதராபாத் மண்ணில் தொடங்கவுள்ளது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்திய மண்ணில் இங்கிலாந்து அணியின் புதிய அணுகுமுறையான பேஸ் பால் திட்டத்தின் மூலம் எப்படி விளையாடும் என்ற எதிர்பார்ப்பு சர்வதேச ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

IND vs ENG 1st Test : England team announced the Playing XI with 3 main spinners for the First Test against England at Hyderabad


ஏனென்றால் எந்த சூழலிலும் அட்டாக் செய்வதில் இருந்து பின் நகர கூடாது என்று தீவிரமாக இருக்கும் பேஸ் பால் அணுகுமுறைக்கு வெற்றி மட்டுமே பிரதானமில்லை. விறுவிறுப்பான டெஸ்ட் போட்டியை ரசிகர்களுக்கு காட்டுவதே இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் மெக்கல்லம் இருவரும் இலக்காக வைத்து விளையாடி வருகின்றனர்.


இந்த பேஸ் பால் அணுகுமுறை இந்திய அணி பாரம்பரிய முறையிலான டெஸ்ட் ஆட்டத்தை விளையாடவுள்ளது. இந்த நிலையில் நாளைய போட்டியில் களமிறங்கும் இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக எதிரணியிடம் நம்பிக்கையாக இருக்கிறோம் என்று காட்டி கொள்வதற்காகவே இங்கிலாந்து அணி இம்மாதிரியான யுக்திகளில் வெளிப்படுத்தும்.


இந்த இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக வழக்கம் போல் கிராலே - பென் டக்கட் கூட்டணியே தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 3வது இடத்திற்கான வீரராக ஓலி போப், அனுபவ வீரர் ஜோ ரூட், அதிரடி வீரர் பேர்ஸ்டோவ், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கடந்த முறை இந்திய சுற்றுப்பயணம் வந்த போது சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்த பென் ஃபோக்ஸ் மீண்டும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனுக்குள் திரும்பியுள்ளார்.


அதன்பின் வேகப்பந்துவீச்சாளராக மார்க் வுட் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளார். மீதமுள்ள 3 இடங்களுக்கும் ரெஹான் அஹ்மத், டாம் ஹார்ட்லி மற்றும் ஜாக் லீச் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸையும் சேர்த்து பார்த்தால், இங்கிலாந்து அணி 4 ஸ்பின்னர்கள், 2 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கவுள்ளது. ரிவர்ஸ் ஸ்விங் செய்வதில் வல்லவரான ஆண்டர்சன் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Wednesday, January 24, 2024, 14:53 [IST]
Other articles published on Jan 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+