ஐதராபாத் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிரடியாக விளையாடி வந்தாலும் ரோகித் சர்மா 24 ரன்களில் ஆட்டம் இழந்து இருப்பது இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனை அடுத்து இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் விளையாடினார்கள். இதில் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரராக விளையாடினார்கள். ஜெய்ஸ்வால் வழக்கம் போல் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை காட்டினார்.

47 பந்துகள் எல்லாம் ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்தார். ஒரு புறம் ரோகித் சர்மா அமைதியாக விளையாட, ஜாக் லீச்சின் பந்துவீச்சை தேவையில்லாத ஷாட் ஆடி தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். ரோஹித் சர்மா தன்னுடைய இன்னிங்ஸில் 27 பந்துகளில் 24 ரன்கள் மட்டுமே சேர்த்து தன்னுடைய விக்கெட்டை பறி கொடுத்தார்.
இதில் ரோகித் சர்மா மூன்று பவுண்டரிகள் அடித்து இருந்தார். ரோகித் சர்மா ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் சுலபமாக இந்திய ஆடுகளங்களில் ரன் அடிக்கலாம் என்பதால் ரோஹித் சர்மா மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
விராட் கோலி வேறு தற்போது அணியில் இல்லாததால் சீனியர் மற்றும் கேப்டன் என்ற முறையில் ரோகித் சர்மா தனி ஆளாக ரன்கள் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை அவர் கடந்த ஐந்து நிமிடங்களாக ஒரு முறை கூட அரைசதம் அடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்துள்ளது.
கடைசியாக அவர் வெஸ்ட் இண்டீஸ் எதிராக போர்ட் ஆப் ஸ்பைனில் முதல் இன்னிங்சில் 80 ரன்கள் இரண்டாவது இன்னிங்ஸில் 57 ரன்கள் அடித்து இருந்தார். ஆனால் அதன் பிறகு நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதலில் ஐந்து ரன்கள் இரண்டாவது இன்னிங்ஸில் டக் அவுட், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 39 ரன்கள் இரண்டாவது இன்னிங்ஸில் 16 ரன்கள் என அடித்து இருந்த ரோகித் சர்மா தற்போது இங்கிலாந்துக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் 24 ரன்கள் தான் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.