இனி புஜாரா, ரஹானேவுக்கு வாய்ப்பு கிடையாது.. வெளிப்படையாக அறிவித்த கேப்டன் ரோகித் சர்மா
ஐதராபாத் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் விராட் கோலி இல்லாத நிலையில் அவருடைய இடத்திற்கு சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு ரோகித் சர்மா வெளிப்படையாக பதில் ஒன்றை அளித்திருக்கிறார்.
இந்திய அணியில் சீனியர் வீரர்களான புஜாரா, ரகானே ஆகியோருக்கு தற்போது டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு கிடைப்பதில்லை. புஜாரா இரட்டை சதம் அடித்திருக்கும் நிலையில் அவருக்கு இந்திய அணியில் விராட் கோலி இடத்தில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்கள் கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர் இனி சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பு எந்த பயனும் இல்லை என்று வெளிப்படையாகவே குறிப்பிட்டார். இது தொடர்பாக பேசிய அவர், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளுக்கு செல்லும் போது புதிய வீரர்களை அழைத்துச் சென்றால் அவர்களால் அங்கு எப்படி விளையாட முடியும்.
இதனால் முதலில் இந்தியாவில் விளையாடும் போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அப்படி வாய்ப்பு கொடுத்தால் தான் அவர்களால் சர்வதேச டெஸ்ட் போட்டி எப்படி இருக்கும் என்பதை உள்ளூர் மைதானங்களில் விளையாடி, அதன் மூலம் அவர்களுக்கு அனுபவம் கிடைக்கும். அதன் பிறகு அவர்களை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லும்போது அவர்களும் அதற்கு ஏற்ற வகையில் நன்றாக விளையாடுவார்கள்.
இதனை தான் நாங்கள் யுக்தியாக வைத்திருக்கிறோம். விராட் கோலி இல்லாத நிலையில் தற்போது அந்த இடத்தில் வேறு ஒரு சீனியர் வீரரை தேர்வு செய்து என்ன பயன் இருக்கப் போகிறது. இதனால் இளம் வீரர்களுக்கு தான் வாய்ப்பு கொடுக்கப் போகிறோம் என்று ரோகித் சர்மா வெளிப்படையாக கூறியிருக்கிறார்.இதனால் கே எல் ராகுல் நடுவரிசை வீரராக களம் இறங்குவார் என்றும் விக்கெட் கீப்பராக கே எஸ் பரத் விளையாட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.


Click it and Unblock the Notifications