Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG- வாங்க! உங்க திறமையை காட்டுங்க.. 2வது ஒருநாள் போட்டிக்குள் வரும் 26 வயது ஸ்டார் பவுலர்

கட்டாக் : இந்தியா, இங்கிலாந்து அணிக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோகித் படை வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடும். இந்த சூழலில் முதல் ஒருநாள் போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனுக்குள் ஹர்ஷித் ராணா அறிமுக வீரராக களமிறங்கினார்.

ind vs eng virat kohli rohit sharma harshit rana

சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ள நிலையில், ஹர்சித்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக தற்போது இந்திய அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய ஆர்ஸ்தீப் இடம்பெறாமல் இருந்தார். இந்த சூழலில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆர்ஸ்தீப் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டி20 போட்டிகளில் விளையாடியதால் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டதாகவும், தற்போது இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆர்ஸ்தீப் கண்டிப்பாக திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 63 போட்டியில் விளையாடியுள்ள ஆர்ஸ்தீப் ஒரு நாள் கிரிக்கெட்டில் பொறுத்தவரை இந்திய அணிக்காக 8 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை தான் வீழ்த்தி இருக்கிறார். அவருடைய எக்னாமி 5 என்று அளவில் இருக்கிறது.

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்பு ஒருநாள் கிரிக்கெட்டில் பயிற்சி பெற வேண்டும் என்பதற்காக இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவர் அணிக்கு கண்டிப்பாக திரும்புகிறார். இதனால் முதல் ஒருநாள் போட்டியில் ஹர்ஷித் ரானா நீக்கப்படுவார் என தெரிகிறது. ஹர்சித் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் ரன்கள் கொஞ்சம் அதிகமாக கொடுத்தார்.ஒரு வேளை ஹர்சித்துக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க கம்பீர நினைத்தால் முகமது ஷமிக்கு இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து கம்பீர் ஓய்வு அளிக்கலாம்.

Story first published: Saturday, February 8, 2025, 15:35 [IST]
Other articles published on Feb 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+