Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நன்றாக அடித்து விளையாடிய ரோகித்..அது கடவுளுக்கே பிடிக்கல போல! மைதான மின்விளக்கால் கடுப்பான ஹிட்மேன்

கட்டாக்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 35 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தங்களுடைய இன்னிங்ஸை ஆரம்பித்தது. கடந்த ஆறு மாதமாக பேட்டிங்கில் தடுமாறிய கேப்டன் ரோகித் சர்மா இன்று அதிரடியை காட்டினார்.

பழைய ஹிட்மேனை பார்த்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் இருந்தனர். எங்கள் தலைவன் ஃபார்ம்க்கு வந்துவிட்டார் என ரோகித் சர்மா ரசிகர்கள் மகிழ்ச்சி கடலில் இருந்தனர். மூன்று சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என பறக்க விட்ட ரோகித், 18 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்தார்.

ind vs eng rohit sharma floodlight

இதில் 19 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். இதில் மூன்று பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் 6.1 ஓவரில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 48 ரன்கள் எடுத்திருந்தது. இந்த சூழ்நிலையில் ரோகித் சர்மா அதிவேகமாக அரை சதம் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அப்போதுதான் திடீரென்று கட்டாக் மைதானத்தில் உள்ள மின்விளக்குகளில் ஒன்று துடிக்க ஆரம்பித்தது.

இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதை அடுத்து மைதானம் மின்விளக்கு மீண்டும் எரிய தொடங்கியது. அதன் பின் மீண்டும் அது ஆப் ஆனது. இதனால் மைதான விளக்குகள் சரியாகிவிடும் என நினைப்பில் இரு அணி வீரர்களும் நின்று கொண்டிருந்தனர். ஆனால் மின்விளக்கு சரியாகவில்லை இதனால் கடுப்பான ரோகித் சர்மா நடுவருடன் ஒரே ஒரு மின்விளக்கு தான் பிரச்சனையாக இருக்கிறது.

அது இல்லை என்றாலும் போட்டியை தொடர முடியும் என்று கேட்டார். ஆனால் இதற்கு நடுவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அனைத்து மின்விளக்குகளும் சரியாக இருந்தால் தான் வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்று குறிப்பிட்ட நடுவர்கள், போட்டியை நிறுத்தினர்.

இதனால் செம கடுப்பான ரோகித் சர்மா கடிந்து கொண்டே பெவிலியன் சென்றார். இந்த சம்பவத்தை குறிப்பிட்டு பலரும் ரோகித் சர்மாவை கிண்டல் செய்து வருகிறார்கள். ரோகித்தே ஆறு மாதத்திற்கு பின் இப்போதுதான் ரன் அடித்து வருவதாகவும் அது யாருக்கோ பிடிக்காமல் மைதான விளக்குகளை ஆப் செய்து விட்டார்கள் என்று கிண்டல் அடித்து வருகின்றனர்.

Story first published: Sunday, February 9, 2025, 19:00 [IST]
Other articles published on Feb 9, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+