பட்டப்பகலில் ஏமாற்றும் இங்கிலாந்து அணி, நடுவர்கள்.. இந்திய அணிக்கு பவுண்டரி போச்சு
மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா அடித்த பவுண்டரி ஒன்றை மூன்றாம் நடுவர் சரிவர பார்க்காமல் கோட்டை விட்டதால் இந்திய அணிக்கு ஒரு ரன் பறிபோனது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த சூழலில் தொடரை தீர்மானிக்கக் கூடிய இரண்டாவது ஒருநாள் போட்டி கார்டிப் நகரில் இன்று தொடங்கியது.

ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருந்ததால் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி நிர்ணயிக்கும் இலக்கை இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது சேஸிங் செய்துவிடலாம் என்ற நோக்கில் இந்த முடிவை எடுத்து இருந்தார். இது போன்ற ஆடுகளங்களில் ஒரு ரன் கூட மிகப் பெரிய தாக்கத்தையும் வித்தியாசத்தையும் ஏற்படுத்த கூடும்.
இந்த நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் கில் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். ஆட்டத்தின் இரண்டாவது ஓவரின் மஹம்முத் வீசிய கடைசி பந்தை ரோகித் சர்மா அழகாக டிரைவ் செய்தார். இந்த பந்தை பவுண்டரி லைன் நோக்கி சென்றது.
அப்போது இங்கிலாந்து அணி கேப்டன் ஹரி குரூப் பந்தை ஓடி சென்று தடுக்க முயன்றார்.அப்போது அவருடைய கால் எதிர்பாராத விதமாக பவுண்ட்ரி லைனில் பட்டது தெரிந்தது. எனினும் இது பவுண்டரியா இல்லையா என்பதை மூன்றாம் நடுவர் உதவியை கள நடுவர் நாடினார். ரீப்ளே காட்சியிலும் ஹாரி புரூக்கின் கால் பவுண்டரி லைனில் பட்டது தெரியவந்தது.
இதனால் மூன்றாம் நடுவர் இதற்கு பவுண்டரி வழங்கி இருக்க வேண்டும். ஆனால் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பது போல் மூன்றாம் நடுவரும் கள நடுவரும் கடந்து சென்று விட்டனர். எனினும் ரோகித் சர்மாவும், கில்லும் மூன்று ரன்கள் ஓடியே எடுத்து விட்டனர். இதனால் இந்திய அணிக்கு ஒரு ரன் பறிபோனது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் வர்ணனையாளர் தினேஷ் கார்த்திக், பந்து அவர் தொடும்போது கால் பவுண்டரி லைனில் பட்டது தெளிவாக தெரிந்தது. எனினும் நடுவர் இதற்கு பவுண்டரி வழங்காதது ஆச்சரியம் அளிப்பதாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications

