Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: யப்பா சாமி முடியல.. கே.எல். ராகுல் செய்த சம்பவம்.. நொந்து போன இந்திய ரசிகர்கள்

பிர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கே.எல். ராகுல் அளித்த தொடக்கம் இந்திய ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கியது. ஆமை வேகத்தில் ஆடிய அவர் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்து, பல பந்துகளை வீணடித்து ஆட்டமிழந்தது ஏமாற்றத்தை அளித்தது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் தொடக்கம் அளித்தனர்.

IND vs ENG KL Rahul Test Cricket

கே.எல். ராகுல் முதல் எட்டு ஓவர்களைச் சந்தித்து நிறைய பந்துகளை வீணடித்தார். அவர் சுமார் 26 பந்துகளைச் சந்தித்து வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஒன்பதாவது ஓவரில் ஆட்டமிழந்தார். கிறிஸ் வோக்ஸ் வீசிய ஒன்பதாவது ஓவரில் அவர் மோசமான முறையில் பவுல்ட் அவுட் ஆனது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. நிதானமாக ஆடி வந்த அவர் விக்கெட் இழக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக நிறைய பந்துகளை வீணடித்ததும் அவருக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியது. அதுவே அவரது விக்கெட்டை இழக்கவும் காரணமாக அமைந்தது.

கிறிஸ் வோக்ஸ் தான் வீசிய முதல் ஐந்து ஓவர்களில் நான்கு மெய்டன் ஓவர்களை வீசியிருந்தார். அவர் அந்த அளவுக்கு அச்சுறுத்தும் பந்துவீச்சாளர் இல்லை என்றபோதும், கே.எல். ராகுல் நிறைய பந்துகளை வீணடித்தது ரசிகர்களை சோர்வடையச் செய்தது.

மறுபுறம், யஷஸ்வி ஜெய்ஸ்வால் எட்டு ஓவர்களின் முடிவில் 26 பந்துகளைச் சந்தித்து 12 ரன்கள் எடுத்திருந்தார். அவர் ஓரளவுக்கு ரன் சேர்த்திருந்த நிலையில், கே.எல். ராகுலும் சில ரன்களை எடுத்திருந்தால் அவருக்கு அழுத்தம் ஏற்பட்டிருக்காது. அந்த அழுத்தத்தால்தான் அவர் ஒன்பதாவது ஓவரில் பதற்றத்தில் பந்தை சரியாகத் தடுக்க முடியாமல் பவுல்ட் ஆனார்.

இந்திய அணி 15 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. அதன் பிறகு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கருண் நாயர் இணைந்து ரன் சேர்த்தனர். இருவரும் விரைவாக ரன் சேர்க்கத் தொடங்கியதால், முதல் விக்கெட் வீழ்ச்சியிலிருந்து இந்திய அணி தப்பியது. ஜெய்ஸ்வால் அதன் பிறகு அதிரடியாக ரன்கள் குவித்து இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்தார்.

இந்த போட்டியில் பும்ரா, சாய் சுதர்சன் மற்றும் ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர், நிதிஷ்குமார் ரெட்டி மற்றும் ஆகாஷ் தீப் அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

Story first published: Wednesday, July 2, 2025, 17:34 [IST]
Other articles published on Jul 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+