Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3வது நடுவர் எதுக்கு இருக்கீங்க...சூர்யகுமார் யாதவுக்கு அநீதி.. இணையத்தில் வெடித்த சர்ச்சை.. விவர இதோ

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவின் விக்கெட் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Recommended Video

சர்ச்சையை ஏற்படுத்திய Surya Kumar Yadav விக்கெட்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 4வது டி20 போட்டி அகமதாபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்துக்கு 186 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது.

இந்நிலையில் போட்டியில் சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவுக்கு நடுவர்கள் தவறான முடிவு வழங்கியுள்ளது இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.

4வது டி20 போட்டி

4வது டி20 போட்டி

இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரில் இங்கிலாந்து 2 -1 என முன்னிலை வகிக்கிறது. இதனால் இந்திய அணிக்கு வாழ்வா சாவா என்ற கட்டத்தில் 4வது டி20 போட்டி இன்று தொடங்கியது. இதில் கடந்த 3 போட்டிகளிலும் சொதப்பிய கே.எல்.ராகுலுக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதே போல இஷானுக்கு பதில் சூர்யகுமார் யாதவும், சஹாலுக்கு பதிலாக ராகுல் சஹாரும் சேர்க்கப்பட்டனர்.

பேட்டிங்

பேட்டிங்

போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா 12 ரன்களுக்கு ஆர்ச்சர் பந்தில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனையடுத்து முதல் விக்கெட்டிற்கு சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். சர்வதேச டி20 போட்டியில் தான் எதிர்கொண்ட முதல் போட்டியிலேயே அவர் சிக்ஸர் அடித்து அனைவரையும் அசரடித்தார்.

 அதிரடி

அதிரடி

அடுத்தடுத்து விக்கெட்களை இழ்ந்து தடுமாறிய போது மறு முனையில் தொடர்ந்து அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் 50 ரன்களை அடித்தார். இது சர்வதேச போட்டியில் அவர் அடிக்கும் முதல் அரை சதமாகும். ஆட்டத்தின் 14வது ஓவரை சாம் கரண் வீச, அதனை ஃபைன் லெக் திசையில் தூக்கி அடித்தார். அதனை டேவிட் மாலன் பிடிக்க 57 ரன்களில் சூர்யகுமார் யாதவ் வெளியேறினார்.

தவறான முடிவு

தவறான முடிவு

ஆனால் சூர்யகுமார் யாதவ் அடித்த பந்தை டேவிட் மாலன் தரையோடு ஒட்டி பிடித்தார். மிகவும் க்ளோஸ் காலாக இருந்த சூழ்நிலையில் களத்தில் இருந்த நடுவர் சூர்யகுமாருக்கு அவுட் கொடுத்துவிட்டு பின்னர் 3வது நடுவருக்கு பரிந்துரைத்தார். வீடியோவில் சரியாக கணிக்க முடியாததால் கள நடுவரின் சாஃப்ட் சிக்னலே கடைசி முடிவு 3வது நடுவர் தெரிவித்தார். இதனால் சூர்யகுமார் யாதவ் வெளியேறினார். ஆனால் உண்மையில் பந்து தரையில் தான் முதலில் பட்டிருந்தது. எனவே நடுவரின் முடிவுக்கு எதிராக இணையத்தில் போர் வெடித்து வருகிறது.

Story first published: Thursday, March 18, 2021, 22:10 [IST]
Other articles published on Mar 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+