For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Day 1 Lunch முன்பே 5 விக்கெட் காலி.. இங்கிலாந்தை எத்தனை ரன்களில் சுருட்டினால் இந்தியாவுக்கு நல்லது

IND vs ENG : இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடலாம். ஆனால் அது அவ்வளவு சுலபம் கிடையாது. ஏனென்றால் முக்கியமான இந்த ஆட்டத்தில் இந்திய அணி டாசை இழந்து விட்டது.

அது மட்டுமில்லாமல் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இல்லை. ராஞ்சி ஆடுகளத்தில் விரிசல்கள் அதிக அளவில் இருக்கிறது. இதன் காரணமாக நேரம் செல்ல செல்ல பந்தின் பவுன்ஸ் குறையும். மேலும் பந்து ஆடுகளத்தில் பட்டு நன்றாக திரும்பும். இதனால் பேட்ஸ்மேன்கள் ரண்களை சேர்ப்பது அரிதாகும்.

Ind vs Eng - 4th test day 1 before Lunch England loses 5 wickets - advantage for india

இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் முதலில் பேட்டிங் செய்யும் அணிகளுக்கு தான் அதிர்ஷ்டம். தற்போது இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்திருக்கிறது. இதன் காரணமாக இந்த போட்டியில் இந்தியா தான் கடைசி இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும். அப்போது ரன்களை திரட்டுவது என்பது மிகவும் கடினமாகும். இதன் காரணமாக இங்கிலாந்து அணியை எவ்வளவு சீக்கிரம் முதலில் ரோகித்தால் சுருட்ட முடியுமோ அவ்வளவும் இந்தியாவுக்கு நல்லது.

இதனை நன்கு புரிந்து கொண்டுள்ள இங்கிலாந்து அதிரடியாக ஆடி ரன்களை சேர்க்க வேண்டும் என்று முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் பாரிஸ்டோ விக்கெட்டை இழந்தது அந்த அணிக்கு மிகப்பெரிய சோகமாக அமைந்தது. அது மட்டுமல்லாமல் மதியநேர உணவு இடைவெளிக்கு முன்பு கடைசி பந்தில் இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இதனால் இங்கிலாந்து அணி 112 ரன்களில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

எனினும் இந்தியா இதை நினைத்து சந்தோஷப்பட முடியாது. காரணம் இங்கிலாந்து அணியை விரைவில் சுருட்ட வேண்டும். இன்னும் சொல்லப்போனால் அவர்களை 200 ரன்களை கூட தொடக்கூடாது. அதிகபட்சம் 200 ரன்களை தாண்டும் அளவுக்கு இங்கிலாந்தை பேட்டிங் செய்ய அனுமதிக்கலாம். அதற்குள் எஞ்சி இருக்கும் ஐந்து விக்கெட்டுகளை எவ்வளவு விரைவாக இந்தியா வீழ்த்துகிறதோ அந்த அளவுக்கு வெற்றி வாய்ப்பு அமையும்.

ஏனென்றால் போகப் போக பேட்டிங் செய்ய பாதகமான ஆடுகளமாக இது மாறும். இதனால் இந்திய அணி வீரர்களும் தடுமாறுவார்கள். முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி ஒரு நூறு ரன்களையாவது கூடுதலாக அடித்திருக்க வேண்டும். எந்த அணி முதலில் அதிக ரன்கள் அடிக்கிறார்களோ அவர்களே இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவார்கள்.

Story first published: Friday, February 23, 2024, 12:17 [IST]
Other articles published on Feb 23, 2024
English summary
Ind vs Eng - 4th test day 1 before Lunch England loses 5 wickets - advantage for india Day 1 Lunch முன்பே 5 விக்கெட் காலி.. இங்கிலாந்தை எத்தனை ரன்களில் சுருட்டினால் இந்தியாவுக்கு நல்லது
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+