Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: என்ன டா பிட்ச் இந்த கலரில் இருக்கு? அப்போ இந்த வீரருக்கு வாய்ப்பு இருக்காதா?

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டிகள் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் சமன் செய்ய முடியும். ஆனால் இங்கிலாந்து அணி லண்டன் ஓவலில் நடைபெறும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் டிரா செய்தாலே தொடரை கைப்பற்றி விடும்.

இதனால் போட்டியை டிரா செய்வதற்காக ஆடுகளத்தை சாதகமாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ்,ஜோப்ரா ஆர்ச்சர், பிரைடன் கர்ஸ் போன்ற முக்கிய வீரர்கள் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார்கள்.

Ind vs Eng

இது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த நிலையில் இந்திய அணி சுழற் பந்துவீச்சாளரான குல்திப் யாதவை பயன்படுத்த யோசித்து வருவதாக செய்திகள் வெளியானது. ஆனால் ஆடுகளத்தை வைத்து தான் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கம்பீர் இருக்கின்றார்.

இந்த தருணத்தில் லண்டன் ஓவல் மைதானத்தில் பிட்ச் பச்சை பசேல் என புற்களால் நிறைந்து இருக்கின்றது. ஒருவேலை ஆடுகளம் இவ்வாறு இருந்தால் அது வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இது போன்ற ஆடுகளத்தில் நான்கு வேக பந்துவீச்சாளர்கள் இருந்தால் தான் சரியான முடிவாக இருக்கும்.

இதில் ஒரு சுழற் பந்துவீச்சாளர் விளையாடினாலே போதும். ஆனால் ஏற்கனவே அணியில் வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா என இரண்டு ஆல்ரவுண்டர்கள் இருக்கின்றார்கள். இதனால் மூன்றாவது ஒரு சுழற் பந்துவீச்சாளர் தேவை இல்லை. இதேபோன்று ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால் பும்ரா ஐந்தாவது டெஸ்டில் இடம் பெறுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கில், இதுவரை பிளேயிங் லெவன் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. புற்கள் இருக்கிறதா இல்லை நீக்கப்படுகிறதா என்பதை பார்த்துவிட்டு தான் பிளேயிங் லெவன் குறித்து நாங்கள் முடிவெடுப்போம் என்று விளக்கம் அளித்துள்ளார்.

Story first published: Wednesday, July 30, 2025, 23:50 [IST]
Other articles published on Jul 30, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+