For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs ENG: 5வது டெஸ்டில் இந்திய அணிக்கு பெரிய சிக்கல்.. பும்ரா,சிராஜ் விளையாடுவார்களா? மாட்டார்களா?

லண்டன்: இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி வரும் வியாழக்கிழமை லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து இரண்டு வெற்றியும், இந்திய அணி ஒரு வெற்றியும் பெற்றிருக்கிறது.

தற்போது ஐந்தாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடர் சமமாகிவிடும். இல்லை டிராவில் முடிவடைந்தால் இங்கிலாந்து அணி தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் வென்று விடும். இதனால் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் எப்படி ஆவது இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தில் களமிறங்குகிறது.

Jasprit bumrah Mohammed siraj

நான்காவது டெஸ்ட் போட்டிக்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கும் வெறும் மூன்று நாட்கள் தான் இடைவெளி என்பதால், இந்திய அணிக்கு பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றது. இந்த தொடரில் சிராஜ் தொடர்ந்து நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கின்றார்.

குறிப்பாக நான்காவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் அவர் 30 ஓவர்களை வீசியிருந்தார். இதன் காரணமாக வெறும் மூன்று நாட்கள் இடைவேளை இருப்பதால், அவர் முழு உடல் தகுதியை எட்டுவாரா என்று தெரியவில்லை.

அதேபோன்று பும்ரா இந்த தொடரின் ஆரம்பத்திலேயே வெறும் மூன்று டெஸ்ட் போட்டிகள் தான் விளையாடுவார் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. தற்போது பும்ரா ஏற்கனவே மூன்று டெஸ்டில் தற்போது விளையாடிவிட்டார். இதனால் கடைசி டெஸ்டில் அவர் பங்கேற்பாரா மாட்டாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

அது மட்டும் இல்லாமல் பும்ரா நான்காவது டெஸ்டில் அவருடைய பந்துவீச்சு வேகம் பெரும் அளவு சரிந்து இருந்தது. மான்செஸ்டர் டெஸ்டில் பும்ரா 33 ஓவர்கள் வீசி வெறும் இரண்டு விக்கெட்டை மட்டும்தான் கைப்பற்றி இருந்தார். தற்போது மூன்று நாட்கள் தான் இடைவேளை இருப்பதால், அவரும் ஐந்தாவது டெஸ்டில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதேபோன்று ஆகாஷ் தீப், ஆர்ஸ்தீப் சிங் ஆகியோரும் காயம் காரணமாக உள்ள நிலையில் பிரசித் கிருஷ்ணா மட்டும்தான் அணியில் கூடுதல் வேகப்பந்துவீச்சாளராக இருக்கின்றார். இதனால் எதிரணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்த போகும் பவுலர்கள் யார்? சிராஜ், பும்ரா ஆகியோர் உடல் தகுதி பெரும் அளவு பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் கடைசி டெஸ்டில் விளையாடவாரா என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.

Story first published: Tuesday, July 29, 2025, 12:08 [IST]
Other articles published on Jul 29, 2025
English summary
Ind vs Eng- Big Problem For India as Siraj and Bumrah fitness is concern
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+