Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மெக்குல்லம் பேச்சை கேட்காத போப்.. இந்தியாவை காப்பி அடிக்க முடிவு.. இங்கிலாந்து அணியில் குழப்பம்

ஐதராபாத் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மெக்குல்லத்தின் பேச்சை அந்த அணி வீரர்கள் கேட்காததால் குழப்பம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்தியாவை கடந்த 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் ஒன்றில் எந்த அணியும் டெஸ்ட் தொடரில் வீழ்த்தியது இல்லை. இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடும் இங்கிலாந்து அணி பேஸ்பால் என்று யுத்தியை தற்போது கடைபிடித்து வருகிறது.

Ind vs Eng - Brendon mccullum is upset as England cricketers in dilemma after olie pope traditional innings

டெஸ்ட் கிரிக்கெட்டை அதிரடியாக ஆட வேண்டும், ஆக்ரோஷமாக எதிரணிக்கு சவால் கொடுக்க வேண்டும் என்பதுதான் இங்கிலாந்து பயிற்சியாளர் மெக்குல்லத்தின் கட்டளை ஆகும். இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி புத்துயிர் பெற்று விளையாடி வருகிறது. ஆனால் இந்தியா போன்ற ஆடுகளங்களில் அதிரடியாக விளையாடுவது கடினம் என்று பல கிரிக்கெட் விமர்சகர்கள் எச்சரிக்கை கொடுத்து வந்தனர்.

ஆனால் இதனை காதில் போட்டுக் கொள்ளாத இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் அந்த அணி 246 ரன்களில் முதல் இன்னிங்சில் ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணியில் கே எல் ராகுல், ஜடேஜா போன்ற வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்க வீரர்கள் ஜாக் கிராலி ,பென் டெக்கட் ஆகியோர் அதிரடியாக விளையாடி நல்ல தொடக்கத்தை பெற்றாலும் அதனை பெரிய ஸ்கோராக மாற்றாமல் ஆட்டமிழந்தனர். இந்த நிலையில் மூன்றாவது வீரராக களம் இறங்கிய ஆலி போப், இந்திய ஆடுகளத்தில் ரன் சேர்க்க வேண்டும் என்றால் கொஞ்சம் அமைதி காக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு ரன்களை சேர்த்தார்.

கொஞ்சம் அதிரடியை காட்டினாலும் பெரும்பாலான நேரங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவர் 28 பந்துகளில் 148 ரன்கள் சேர்க்க, இதன் மூலம் நீங்கள் அந்த அணி இந்தியாவை விட 126 ரன்கள் கூடுதலாக முன்னிலை பெற்றது. எனினும் ஆலி போப்பின் இந்த ஆட்டத்தை இங்கிலாந்து அணி பயிற்சியாளர் மெக்குல்லம் ரசிக்கவில்லை என தெரிகிறது.

அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்ப்பதுதான் திட்டம் என்றும் அதிலிருந்து எப்போதும் பின்வாங்க கூடாது என்பதுதான் மெக்குல்லத்தின் கட்டளை. ஆனால் அதனை மீறி விளையாடி உள்ள ஆலி போப், தற்போது வெற்றி பெற்றிருக்கிறார். இதனால் மெக்குல்லத்தின் பேச்சைக் கேட்பதா இல்லை ஆலி போப்பின் ஆட்டத்தை பின்பற்றுவதா? என்பதை தேர்வு செய்ய முடியாமல் இங்கிலாந்து அணி வீரர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

Story first published: Sunday, January 28, 2024, 7:28 [IST]
Other articles published on Jan 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+