Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முன்னாள் கேப்டன் இல்லாமல்.. வசமாக சிக்கிய ரோஹித் சர்மா.. இங்கிலாந்து வைத்த ட்விஸ்ட்

ஹைதராபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி இல்லாமல் கேப்டன் ரோஹித் சர்மா தவித்து வருகிறார். தற்போது நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் முதல் இன்னிங்க்ஸில் இந்தியா முன்னிலை பெற்ற போதும், இரண்டாவது இன்னிங்க்ஸ் பந்துவீச்சில் சொதப்பி இருக்கிறது.

இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டத்தின் முடிவில் 126 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் 100 ரன்கள் எடுத்தால் இந்திய அணிக்கு சேஸிங்கில் பெரிய சிக்கல் ஏற்படும். இந்த நிலையில் தான் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் ஆலோசனைகள் இல்லாமல் இந்திய அணியின் பந்துவீச்சின் போது கேப்டன் ரோஹித் சர்மா தவித்து வருகிறார். கோலி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகி இருக்கும் நிலையில், ரோஹித் சர்மாவுக்கு அது சிறிய பின்னடைவாக அமைந்துள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. இந்தியா தன் முதல் இன்னிங்க்ஸில் 436 ரன்கள் எடுத்தது. அடுத்து இங்கிலாந்து அணி தன் இரண்டாவது இன்னிங்க்ஸில் 200 ரன்களுக்குள் ஆட்டமிழக்கும் என அனைவரும் எண்ணிய நிலையில் இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணி ரன் குவித்த நிலையில் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் அவர்களை தடுத்து நிறுத்த எந்த திட்டமும் இல்லை. இந்த இடத்தில் தான் அனுபவ வீரரான விராட் கோலி இல்லாதது பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.

IND vs ENG : Captain Rohit Sharma needs the advice of Virat Kohli at this time

விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் சிறந்த கேப்டனாக தன்னை நிரூபித்தவர். டெஸ்ட் போட்டிகளில் அவரது ஆக்ரோஷமான குணம் காரணமாக பல முறை தோல்வி அடைய வேண்டிய போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. மேலும், அவரது குணம் அப்படியே மற்ற வீரர்களையும் உத்வேகப்படுத்தும். விராட் கோலி கேப்டன் பதவியை விட்டு விலகிய பின் ரோஹித் சர்மா கேப்டன் ஆன போதும், விராட் கோலியை தன் அருகிலேயே வைத்துக் கொண்டு அவரிடம் ஆலோசனை செய்தே பல முடிவுகளை எடுத்து வருகிறார்.

குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் சில சமயம் விக்கெட் விழாமல் இருக்கும் போது விராட் கோலியின் ஆலோசனைகளை அவர் கேட்பதை பல முறை பார்த்திருக்கலாம். ஃபீல்டிங் நிறுத்துவது மற்றும் பந்துவீச்சாளரை மாற்றுவது, குறிப்பிட்ட பேட்ஸ்மேனுக்கு எந்த மாதிரி பந்து வீசுவது என கூறும் ஆலோசனைகள் பலமுறை அணியின் வெற்றிக்கு வழி வகுத்து இருக்கின்றன.

சமீபத்தில் முடிந்த தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்தியா பேட்டிங்கில் சொதப்பி தோல்வி அடைந்த நிலையில், இரண்டாவது போட்டியில் பேட்டிங்கில் சமாளித்தாலும், பந்துவீச்சில் விராட் கோலியின் ஆலோசனைகளால் இந்தியா விக்கெட் வேட்டையாடியது. அந்தப் போட்டியில் பாதி கேப்டனாகவே செயல்பட்டார் விராட் கோலி. இந்தியா வெற்றி பெற்று தொடரை 1 - 1 என சமன் செய்தது.

ஆனால், இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகி இருக்கிறார். அதன் காரணமாகவே இக்கட்டான நேரத்தில் கோலி இல்லாமல், ரோஹித் சர்மா தவித்து வருகிறார். முதல் டெஸ்ட்டில் இந்தியா ஜெயிக்க அதிக வாய்ப்பு இருந்தாலும், எளிதாக முடிய வேண்டிய போட்டி, கடினமாக மாறி உள்ளது.

Story first published: Sunday, January 28, 2024, 9:31 [IST]
Other articles published on Jan 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+