அகமதாபாத் : இந்தியா இங்கிலாந்து அணிகள் போதும் மூன்றாவது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் புதன்கிழமை நடைபெற்று வருகிறது. விராட் கோலி, ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர், கில், ஹர்திக் பாண்டியா போன்ற ஸ்டார் வீரர்கள் இந்த அணியில் இடம் பிடித்திருப்பதால் இந்த போட்டியை காண ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.
இந்த சூழலில் இந்த தொடரை இந்திய அணி ஏற்கனவே வென்று விட்டதால், மூன்றாவது போட்டி சம்பிரதாய ஆட்டமாக தான் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஒரு காலத்தில் கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சிகளை மட்டும் தான் பார்க்க முடியும்.

இதனால் இந்தியா விளையாடுகிறது என்றால் பல பேர் லீவ் போட்டு விடுவார்கள். இந்த நிலையில் செல்போன்களில் கிரிக்கெட் போட்டிகளை நேரலையில் பார்க்கலாம் என்ற ஒரு வசதி வந்த பிறகு ரசிகர்கள் தாங்கள் செல்லும் இடத்தில் கூட கிரிக்கெட் போட்டிகளை பார்க்க முடிகிறது. ஒரு காலத்தில் ஆங்கிலத்திலும் ஹிந்தியில் மட்டும் தான் கிரிக்கெட் வர்ணனை செய்யப்படும்.
ஆனால் தற்போது ஸ்டார் நிறுவனம் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பு செய்ய தொடங்கியதில் இருந்து நாட்டில் உள்ள அனைத்து முக்கிய மொழிகளிலும் போட்டிகளை ஒளிபரப்பு செய்கின்றது. இதனால் பல தமிழக ரசிகர்கள் தமிழிலே கிரிக்கெட் பார்ப்பதை விரும்புவார்கள். ஒருவேளை தமிழ் கிரிக்கெட் வர்ணனை பிடிக்கவில்லை என்றால் ஆங்கிலத்தில் வர்ணனையை பார்ப்பார்கள்.
ஆனால் ஒரு காலத்தில் கூட ஹிந்தியில் பார்த்தது கிடையாது. ஆனால் தற்போது டிஸ்னி ஹாட் ஸ்டாரின் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெறும் ஹிந்தியில் மட்டும் தான் கிரிக்கெட் வர்ணனை மற்றும் வீரர்களின் பெயர் தெரிகிறது. இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆங்கிலம் மற்றும் தமிழில் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க முடியவில்லை என்று பலரும் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் கிரிக்கெட்டில் கூட ஹிந்தி திணிப்பு வந்துவிட்டதா என்று கேள்வி கேட்டு வருகின்றனர். இது தொழில்நுட்ப கோளாறு தான் என்றும் உறுதியாக இதை சரி செய்து வருவதாக டிஸ்னி ஹாட்ஸ்டார் தரப்பு தெரிவித்து இருக்கிறது.