Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விக்கெட் மெஷின்யா இந்த ஆளு.. அஸ்வினால் நெருங்க கூட முடியாது.. ஆண்டர்சன் படைக்கப்போகும் மெகா சாதனை!

தரம்சாலா : இந்திய அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி பிரம்மாண்ட சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி நாளை தரம்சாலா மைதானத்தில் தொடங்கவுள்ளது. ஏற்கனவே இந்திய அணி 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. ஐதராபாத் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தாலும், அடுத்தடுத்து 3 டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான கம்பேக்கை இந்திய அணி நிகழ்த்தியுள்ளது.

IND vs ENG England Bowler James Anderson need 2 wickets to reach First Fast bowler to get 700 Wickets in Test Cricket

இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியிடமிருந்து குறிப்பிடத்தகுந்த சில வீரர்கள் மட்டுமே சிறப்பாக விளையாடியுள்ளனர். ஜாக் லீச் முதல் போட்டியுடன் காயம் காரணமாக வெளியேறிய பின், டாம் ஹார்ட்லி மற்றும் சோயப் பஷீர் என்று 2 தரமான ஸ்பின்னர்களை இங்கிலாந்து அணி நிர்வாகம் கண்டறிந்துள்ளது. அதேபோல் முதல் டெஸ்டில் போப் தரமான சதம் ஒன்றை விளாசினார்.

அதேபோல் இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் சுமார் 42 வயதிலும் சீரான பவுலிங்கை வெளிப்படுத்தி வருகிறார். இந்த டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஜெய்ஸ்வாலை தவிர்த்து வேறு எந்த வீரராலும் ஆண்டர்சன் எளிதாக அட்டாக் செய்ய முடியவில்லை. இந்த நிலையில் 5வது டெஸ்டில் பிரம்மாண்ட சாதனை ஒன்றை படைக்க ஆண்டர்சனுக்கு வாய்ப்பு அமைந்துள்ளது.

இதுவரை 186 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் மொத்தமாக 698 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இன்னும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில், 700 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது வீரர் என்ற சாதனையை ஆண்டர்சன் படைப்பார். அதேபோல் இங்கிலாந்து அணிக்காக 700 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையையும் பெறுவார்.

இவருக்கு முன்பாக இலங்கை சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் மற்றும் ஆஸ்திரேலியா சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே ஆகியோர் 700 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கின்றனர். அதேபோல் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற பிரம்மாண்ட சாதனையை ஆண்டர்சன் படைக்க முடியும். ஏற்கனவே தரம்சாலா டெஸ்ட் போட்டியை காண 5 ஆயிரம் இங்கிலாந்து ரசிகர்கள் கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஆண்டர்சன் சாதனை படைக்கும் பட்சத்தில், அனைவருக்கும் மறக்க முடியாத ஆட்டமாக இது அமையும் என்று பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, March 6, 2024, 15:58 [IST]
Other articles published on Mar 6, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+