Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்களை எல்லாம் நம்பினால் தெருவுக்கு தான் போகனும்.. கேப்டன் பென் ஸ்டோக்சை ஏமாற்றிய இங்கி. வீரர்கள்

ஐதராபாத் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ், தங்களுடைய வீரர்களை நம்பி ஏமாந்து போன சம்பவம் மைதானத்தில் அரங்கேறி இருக்கிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒவ்வொரு விக்கெட்டும் மிகவும் முக்கியம். டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை எதிரணியில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே வெற்றி கிடைக்கும். அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டிஆர்எஸ் முறையை பயன்படுத்துவது என்பது மிகவும் முக்கியம்.

IND VS ENG - England captain Ben stokes Wasted 3 DRS Chnaces with in 13.2 overs

அதுவும் இந்தியா போன்ற சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானங்களில் டிஆர்எஸ் என்பது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் பந்து எப்படி திரும்பும் என்று நடுவர்களால் கணிக்க முடியாது. இதனால் பல தவறுகள் நடைபெற வாய்ப்புண்டு. இந்த தவறுகளை எல்லாம் திருத்திக் கொள்வதற்கு தான் டிஆர்எஸ் தொழில்நுட்பம் கடைபிடிக்கப்படுகிறது.

தற்போது ஒவ்வொரு இன்னிங்சிலும் மூன்று டிஆர்எஸ் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அந்த மூன்று டிஆர்எஸ் முறையும் கேப்டன்கள் சரியாக பார்த்து வீரர்களின் அறிவுரையை கேட்டு தான் எடுப்பார்கள். அந்த வகையில் விக்கெட் கீப்பர்களும் பவுலர்களும் விக்கெட் வேண்டும் என்ற தன்னலம் இன்றி சரியாக இருந்தால் மட்டுமே டி ஆர் எஸ் முடிவை எடுங்கள் என்று கேப்டனிடம் கூறுவார்கள்.

ஆனால் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெறும் 14 ஓவர்கள் முடிவதற்குள்ளே இங்கிலாந்து அணி தங்களிடம் இருந்த மூன்று டிஆர்எஸ் வாய்ப்பை வீணடித்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது இங்கிலாந்துக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் இந்த இன்னிங்ஸ் முழுவதும் இனி இங்கிலாந்து அணியால் டிஆர்எஸ் முடிவை எடுக்கவே முடியாது.

இதன் காரணமாக இந்திய அணி வீரர்கள் தைரியமாக விளையாடலாம். ஆட்டத்தின் 2.3 வது ஓவரில் ஜெய்ஸ்வால் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது மார்க் வுட் டிஆர்எஸ் முடிவை கேட்க அது தோல்வியில் முடிந்தது.இதேபோன்று ஆட்டத்தின் 11.4வது ஓவரில் சுழற் பந்துவீச்சாளர் ஹாட்லி ரோகித் சர்மாவுக்கு drs முடிவு கேட்க அதுவும் தவறாக போய் முடிவடைந்தது.

இதுபோன்று 13.2 வது ஓவரில் சிக்மார்களுக்கு ஹாட்லி மற்றும் சக வீரர்கள் டிஆர்எஸ் முடிவை கேட்க அதையும் நம்பி பென் ஸ்டோக்ஸ் எடுத்து தோல்வியில் முடிவடைந்தது. இதனால் 13.2 ஓவர்களில் எல்லாம் மூன்று டிஆர்எஸ் வாய்ப்பை இங்கிலாந்து வீணடித்து விட்டதால் இந்த இன்னிங்ஸ் முழுவதும் வேறு ஒரு டிஆர்எஸ்ஐ இங்கிலாந்து அணியால் பயன்படுத்த முடியாது. பவுலர்களையும் பில்டர்களையும் நம்பி பென் ஸ்டோக்ஸ் டிர்எஸ் முடிவை கேட்டு ஸ்டோக்ஸ் ஏமாந்து விட்டார்.

Story first published: Thursday, January 25, 2024, 17:13 [IST]
Other articles published on Jan 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+