Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிட்சில் ஆப்புனு நினைச்சியா? நட்டுல வச்சேன்.. கதிகலங்கிய இங்கிலாந்து.. இந்தியாவின் மாஸ்டர் பிளான்

Akash deep : இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது போட்டியில் இந்திய அணியில் அறிமுகமான ஆகாஷ் தீப் ஆக்ரோஷமாக பந்துவீசி அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் இங்கிலாந்து அணி கதிகலங்கி நிற்கிறது.

ராஞ்சியில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை தயார் செய்திருப்பதாக இங்கிலாந்து அணி புலம்பியது. இது குறித்து பேசிய இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் இது போன்ற ஆடுகளத்தை தாம் பார்த்ததில்லை என்று கூறினார்.

Ind vs Eng - England prepared for spin and akash deep came out of syllabus

மேலும் ஆடுகளத்தில் விரிசல்கள் இருந்ததால் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என நினைத்துக் கொண்டு இங்கிலாந்து அணி வீரர்கள் அதற்கு தகுந்தார் போல் தங்களுடைய மனதையும் பேட்டிங் உத்திகளையும் மாற்றினர். ஆனால் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் எப்படி அவுட் ஆப் சிலபஸ்ஸிலிருந்து கேள்வி வந்து மாணவர்களை திணறடிக்குமோ அதேபோல் சுழற் பந்துவீச்சுக்க தயாரான இங்கிலாந்து அணி வீரர்களுக்கு அவுட் ஆப் சிலபஸில் இருந்து ஆகாஷ் தீப் வந்து கடும் நெருக்கடியை ஏற்படுத்தினார்.

ஆகாஷ் தீப்பின் இந்த பந்துவீச்சை இங்கிலாந்து அணி வீரர்கள் தங்களது உடைய கனவிலும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். ஆடுகளம் காய்ந்த நிலையில் இருந்தாலும் ஆகாஷ் தீப், ஸ்விங்கை நம்பி பந்து வீசாமல் முழுக்க முழுக்க வேகத்தை நம்பி வந்து பேசியதால் அவருக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகள் கிடைத்தது. ஷார்ட் பால், ஸ்டெம்புகளை நோக்கி பந்து வீசுவது பந்து வெளியில் இருந்து ஸ்டம்புக்கு நோக்கி கொண்டு வருவது என ஆகாஷ் தீப் தன்னுடைய யுத்திகளை மாற்றிக் கொண்டே இருந்தார்.

எனினும் ஆகாஷ் நோபால் வீசி வருவதை மட்டும் கொஞ்சம் சரி செய்து கொள்ள வேண்டும். இதுவரை ஏழு ஓவர்கள் வீசி அதில் இரண்டு நோபால்களை வீசியிருக்கிறார். அதேசமயம் முகமது சிராஜ் பந்தை கொஞ்சம் ஸ்விங் செய்ய பார்த்தார். ஏனென்றால் நேற்று ராஞ்சியில் மழை கொஞ்சம் பெய்தது. இதனால் ஆடுகளத்தில் ஸ்விங் இருக்கும் என்று நம்பி அவர் பந்தை ஸ்விங் செய்ய அது அவருக்கு பலன் அளிக்கவில்லை.

இதனால் 4 ஓவரில் அவர் 27 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஒரு காலத்தில் தான் இந்திய அணி சுழற் பந்துவீச்சை நம்பி அதற்காக ஆடுகளத்தை தயாரித்தது. ஆனால் இப்போது இருக்கும் வீரர்கள் எந்த ஆடுகளமாக இருந்தாலும் விக்கெட்டுகளை வீழ்த்துவார்கள் என்பதை இங்கிலாந்து அணி மறந்துவிட்டது.

Story first published: Friday, February 23, 2024, 11:23 [IST]
Other articles published on Feb 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+