For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பேஸ்பால்-க்கு எதிரான தீயசக்தி மேடம்.. புலம்பிய ஸ்டோக்ஸ்.. தெறிக்கவிடும் இந்திய ரசிகர்களின் மீம்ஸ்!

தரம்சாலா : இந்தியா - இங்கிலாந்து இடையிலான கடைசி டெஸ்ட் முடிவடைந்த நிலையில், சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கியுள்ள அசத்தல் மீம்ஸை பார்க்கலாம்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இதனை கிண்டல் செய்யும் வகையில் வியாபாரி படத்தில் ஜெயிலில் இருந்து வரும் வடிவேலுவை செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளால் பதற வைப்பார்கள். அதற்கு புரியாத மாதிரியே வடிவேலு பதில் அளிப்பார். அதனை மாற்றி, முதல் போட்டியில் வெற்றி.. அதன்பின் ரிவென்ஜ் எடுக்கிறேன் என்று கதற கதற.. நீ நினைக்கிறே மாதிரி கிடையாது.. 4 மேட்சையும் 3 - 4 நாட்களில் வின் பண்னிட்டான் என்று கூறுவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.

IND vs ENG Fantastic memes from Social media after India beat England by 4-1 in the 5 Match test Series

சலார் படத்தில் நண்பனுக்காக ரத்த வெறி பிடித்து வேட்டையாடுவார் பிரபாஸ். அவரது பெயரை பிருத்வி ராஜ், அவரது நண்பர்களிடம் சவுரியங்கா என்று உண்மையை கூறுவார். அதனை மாற்றி, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள், அதிகபட்ச ஸ்கோர், அதிக பேட்டிங் சராசரி, அதிக சதங்கள், அதிக பவுண்டரிகள், அதிக சிக்ஸ் மற்றும் தொடர் நாயகன் விருது வென்றவர் ஜெய்ஸ்வால் என்று அறிவிப்பது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் மரண மாஸ் ரகம்.

IND vs ENG Fantastic memes from Social media after India beat England by 4-1 in the 5 Match test Series

இந்தியா - இங்கிலாந்து இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியில் 3வது நாள் ஆட்டம் விரைவாக முடிவடைந்தது. ஒருநாள் முழுக்க இங்கிலாந்து அணி பேட்டிங் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் விரைவாக ஆட்டமிழந்தனர். இதனை கிண்டல் செய்யும் வகையில் நாடோடிகள் படத்தில் காதலர்களை பஸ் ஏற்றி அனுப்பி வைக்கும் சசிக்குமாரை போல், இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு அந்த அணி வீரர்களை ஐபிஎல் தொடரின் பயிற்சிக்கு அனுப்பி வைப்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

IND vs ENG Fantastic memes from Social media after India beat England by 4-1 in the 5 Match test Series

இங்கிலாந்து அணியின் பாய்காட், ரோகித் சர்மா கடந்த 4 ஆண்டுகளில் 2 சதங்களை தான் சொந்த மண்ணில் அடித்தார் என்று கிண்டல் செய்திருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மட்டும் 2 சதங்களை விளாசி அசத்தி இருக்கிறார் ரோகித் சர்மா. இதனை கேப்டன் மில்லர் படத்துடன் ஒப்பிட்டு, தனுஷ் பிரிட்டிஷ் வீரர்களை வேட்டையாடுவது போல் ரோகித் சர்மா இங்கிலாந்து பவுலர்களை வேட்டையாடியதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மிரட்டல்.

IND vs ENG Fantastic memes from Social media after India beat England by 4-1 in the 5 Match test Series

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக இங்கிலாந்து அணி, "பேஸ்பால்" என்ற பெயரை கூறி பலருக்கும் பீதியை கொடுத்து வந்தது. ஆனால் இந்திய அணியிடமும், இந்திய மண்ணிலும் பேஸ்பால் ஆட்டம் கண்டுவிட்டது. டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது. இதற்கு அஸ்வின், குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா தான் முக்கிய காரணமாக அமைந்தார்கள். இதனை சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் சொல்லும் வசனத்தை இங்கிலாந்து அணி சொல்வதாக, "பேஸ்பால்-க்கு எதிரான தீயசக்திங்க மேடம் இவங்க" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா ரகம்.

IND vs ENG Fantastic memes from Social media after India beat England by 4-1 in the 5 Match test Series
Story first published: Sunday, March 10, 2024, 11:13 [IST]
Other articles published on Mar 10, 2024
English summary
IND vs ENG : Fantastic memes from Social media after India beat England by 4-1 in the 5 Match test Series
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+