For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs ENG : ”வந்தான்.. அவுட்டாகுறான்.. ரிப்பீட்டு” ரோகித் சர்மா, கில்லை பொளக்கும் வெறித்தன மீம்ஸ்!

ஐதராபாத் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 4வது நாளில் நடைபெற்ற சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உருவாக்கியுள்ள மீம்ஸை பார்க்கலாம்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்த சந்திப்புக்கு பின் இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். இதனை கலகலப்பு படத்தில் சந்தானம் மற்றும் விமலிடம் மாட்டிக் கொள்ளும் மனோபாலா, ”எப்புட்றா.. ஒரு இண்டிகேட்டர்ல கன்ஃபியூஸ் பண்ணேன் பார்த்தீயா” என்று கூறுவார். அதனை மாற்றி ரோகித் சர்மா, ”வழக்கம் போல் தோல்வியடைந்ததும் டிராவிட்டை பிரஸ் மீட் அனுப்பி எப்படி எஸ்கேப் ஆகிட்டேன் பார்த்தியா” என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.

IND vs ENG : Fantastic Memes from Social Media after India lost by 28 runs against England in the 1st Test at Hyderabad


நேற்றைய ஆட்டத்தில் முக்கியமான நேரத்தில் களமிறங்கிய இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில், டக் அவுட்டாகி வெளியேறினார். இதனை மாநாடு படத்தில் எஸ்ஜே சூர்யா, ”வந்தான்.. சுட்டான்.. செத்தான்.. ரிப்பீட்டு” என்று சிம்புவை கூறுவார். அதுபோல் சுப்மன் கில், ”வந்தான்.. அவுட்டாகுறான்.. ரிப்பீட்டு” என்று இருப்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ரசிகர்களின் குமுறல்.


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்விக்கு டிராவிஸ் ஹெட் முக்கிய காரணமாக அமைந்தார். அதுபோல் இங்கிலாந்து அணியின் போப் தனியாளாக ஆட்டத்தை மாற்றினார். இதனை சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலம் ட்ரெண்டான லாரன்ஸ், ”மேடோம்.. இது ஆக்டிங் மேடோம்..” என்று சொல்வார். அதனை மாற்றி இந்திய ரசிகர்கள், ”இவன் டிராவிஸ் ஹெட் மேடோம்” என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.


பகவதி படத்தில் சிங்கமுத்துவை பார்த்த பின் டீ கடை பாஸ் விஜயிடம், ”சொந்த ஊர்க்காரங்க.. 2 டீ மட்டும்” என்று கேட்பார். அதற்கு விஜய், ”சே..சே.. சொந்த ஊர்க்காரஙக்.. 2 டீ தான.. குடிச்சிட்டு போட்டும்.. குடிச்சிட்டு போகட்டும்” என்று அனுமதியளிப்பார். அதுபோல் இந்திய அணியிடம் இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ், ஹார்ட்லி அறிமுக வீரர் என்று கேட்பது போலவும், அதற்கு அவர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அறிமுக போட்டியிலேயே அசத்தியதையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா.


வெஸ்ட் இண்டீஸ் அணியின் அறிமுக வீரரான ஷமார் ஜோசப் ஒற்றை ஆளாக நின்று ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி வரலாறு படைத்தார். இதனை பார்த்த இந்திய ரசிகர்கள் பலரும் ஷமார் ஜோசப்பை பாராட்டி தள்ளினர். அதனை வேலாயுதம் படத்தில், ”அவன்தான்யா உண்மையான வீரன்.. வேலாயுதம்னா சும்மாவா” பருத்திவீரன் படத்தில் நடித்தவர் வசனம் பேசுவார். அதற்கு விஜய், ”நம்ம பேரும் வேலாயுதம் தான் அண்ணே” என்று கூறி பல்ப் வாங்குவார். இதனை மாற்றி இந்திய ரசிகர்களிடம், ”அண்ணே நம்மளும் ஜெனரேஷனல் டேலண்ட் தான்” என்று கூறி சுப்மன் கில் சொல்வது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் உச்சக்கட்ட காமெடி.

IND vs ENG : Fantastic Memes from Social Media after India lost by 28 runs against England in the 1st Test at Hyderabad
IND vs ENG : Fantastic Memes from Social Media after India lost by 28 runs against England in the 1st Test at Hyderabad
Story first published: Monday, January 29, 2024, 10:25 [IST]
Other articles published on Jan 29, 2024
English summary
IND vs ENG : Fantastic Memes from Social Media after India lost by 28 runs against England in the 1st Test at Hyderabad
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+