Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: உங்களுக்கு எப்படி மனசு வருது? 30 வயது ஸ்டார் வீரரை நீக்க கூடாது.. ஹர்பஜன் சிங் கருத்து

மும்பை : இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 19 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த சூழலில் கில்லுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ், அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் அரை சதம் அடித்தார். இந்த நிலையில் விராட் கோலிக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாகத்தான் தாம் களமிறங்கியதாகவும் இல்லை என்றால் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடியிருக்க மாட்டேன் என்று ஸ்ரேயாஸ் கூறியிருந்தார்.

ind vs eng shreyas iyer rohit sharma virat kohli

இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், "இந்திய அணி நிர்வாகம் அணியில் ஸ்ரேயாஸ் ஐயரை எடுத்திருக்கிறது. ஆனால் அவரை பிளேயிங் லெவனில் சேர்க்காமல் ஜெய்ஸ்வாலை தொடக்க வீரராக களம் இறக்க முடிவெடுத்திருந்தது தற்போது தெரிய வந்திருக்கிறது".

"இதன் மூலம் ஜெய்ஸ்வால் மீது தான் அணி நிர்வாகம் அதிக நம்பிக்கை வைத்திருப்பது தெரிய வந்திருக்கிறது. ஒருவேளை தொடக்க வீரர்கள் வலது கை மற்றும் இடது கை பேட்ஸ்மேன்களாக இருக்க வேண்டும் என்று யோசித்து இருக்கலாம். இதனால் தான் ஜெய்ஸ்வாலை தொடக்க வீரராக களம் இருக்கிறார்கள் என்று அணி நிர்வாகம் நினைத்தால், அது ஜெய்ஸ்வால் ஓபனிங் இறங்க வேண்டும் என்பதுதான் காரணமாக இருந்திருக்கும்".

"எனினும் ஸ்ரேயாஸ், தன்னுடைய திறமையை பலமுறை நிரூபித்திருக்கிறார். உலகக் கோப்பையில் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்து இருக்கிறார். ஒரு வீரர் தனக்கு கிடைத்த வாய்ப்புகள் எல்லாம் அதிக ரன்கள் அடித்திருக்கும்போது அவருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என யோசித்து இருப்பார். ஏன் கடவுளே ஸ்ரேயாஸ் சிறந்த வீரராக இருக்கிறார் என நினைத்திருக்கலாம்".

"ஆனால் பலரும் ஸ்ரேயாஸ்க்கு நல்லது நடக்கும் என நினைக்கிறார்கள். அது அவருக்கு நடப்பதில்லை. கடந்த போட்டியில் ஸ்ரேயாஸ் அடித்த ரன்களால் தான் இந்திய அணி வெற்றி பெற்றது. முதல் ஒருநாள் போட்டி இந்தியாவுக்கு சாதகமாக மாறியதற்கு அவர் அடித்த ஐம்பது ரன்கள் தான் காரணம். அது ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டது. இப்படி ரன்கள் குவித்த வீரரை அணியிலிருந்து தூக்குவது என்பது சரியே கிடையாது" என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, February 8, 2025, 17:17 [IST]
Other articles published on Feb 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+