Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: 5வது டெஸ்டில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? சீனா மேன் பவுலருக்கு இடம் கிடைக்குமா?

லண்டன்: பெரும் முக்கியத்துவம் வாய்ந்த இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டி வரும் வியாழக்கிழமை லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இங்கிலாந்து அணி இரண்டு வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்திய அணி ஒரு வெற்றியை தான் பெற்றிருக்கிறது.

இதன் காரணமாக இந்த தொடரை சமன் செய்ய வேண்டும் என்றால் கடைசி டெஸ்டில் எப்படி ஆவது இந்திய அணி வெற்றி பெற வேண்டும். ஆனால் இந்திய அணியில் பல பிரச்சனைகள் இருக்கின்றது. பேட்டிங்கில் சில வீரர்கள் காலை வாரி விடுவது மற்ற வீரர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறது.

Ind vs Eng

குறிப்பாக ஜெய்ஸ்வால் சாய் சுதர்சன் ஆகியோர் இரண்டாவது டெஸ்டில் முக்கியமான கட்டத்தில் டக் அவுட் ஆகி வெளியேறினர். எனினும் ஐந்தாவது டெஸ்டில் இந்த இரண்டு வீரர்களும் இடம் பெறுவார்கள் என தெரிகிறது. ஆனால் ஐந்தாவது டெஸ்ட் தங்களுடைய திறமையை இந்த இரண்டு வீரர்களும் மீண்டும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

தொடக்க வீரராக ராகுலுடன் ஜெய்ஸ்வால் களம் இறங்குவார். மூன்றாவது வீரராக சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. நான்காவது வீரராக கில்லும், ஐந்தாவது வீரராக துருவ் ஜூரல் விளையாட அதிக வாய்ப்பு இருக்கிறது. ரிஷப் பண்ட் காயம் காரணமாக இந்த போட்டியில் பங்கேற்க மாட்டார். ஆறாவது வீரராக ஜடேஜாவும், ஏழாவது வீரராக வாஷிங்டன் சுந்தரும் களமிறங்குவார்கள்.

இதைப் போன்று எட்டாவது வீரராக ஆல்ரவுண்டர் பேட்ஸ்மேன் சர்துல் தாக்கூருக்கு வாய்ப்பு வழங்கப்படும். ஒன்பதாவது வீரராக அன்சூல் காம்போஜும், பத்தாவது வீரராக சிராஜும் 11 வது வீரராக பும்ராவும் விளையாடக் கூடும். ஒருவேளை சிராஜ் அல்லது பும்ராவுக்கு உடல் தகுதியில் பிரச்சனை இருந்தால் அவர்களுக்கு பதில் பிரசித் கிருஷ்ணா மீண்டும் அணியில் இடம் பிடிக்கலாம். ஒருவேளை ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தால் சர்துல் தாக்கூர் பதில் சீனாமேன் என்ற பந்து வகையான இடது கை லெக் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் அணியில் இடம் பிடிக்கலாம்.

இந்திய அணியின் பிளேயிங் லெவன் உத்தேசம்: 1.ஜெய்ஸ்வால், 2, ராகுல், 3, சாய் சுதர்சன், 4, கில், 5, துருவ் ஜூரல், 6, ஜடேஜா, 7, வாசிங்டன் சுந்தர், 8, சர்துல் தாக்கூர்/ குல்தீப் யாதவ், 9, பும்ரா/பிரசித் கிருஷ்ணா , 10, சிராஜ், 11, அன்சூல் காம்போஜ்

Story first published: Tuesday, July 29, 2025, 12:33 [IST]
Other articles published on Jul 29, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+