பும்ராவை தவிர மற்ற இந்திய பவுலர்களை சூளுக்கு எடுக்கும் இங்கிலாந்து பேட்டர்ஸ்.. ரசிகர்கள் கோபம்
லீட்ஸ்: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும் ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதை அடுத்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் ஜெய்ஸ்வால் சுப்மன் கில் ஆகியோர் அபாரமாக சதம் அடித்தனர். 359 ரன்களுக்கு மூன்று விக்கெட் என்ற ஸ்கோருடன் இரண்டாம் நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்தது.

இதில் அதிரடியாக விளையாடி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய ஏழாவது சதத்தை பூர்த்தி செய்தார். சுப்மன் கில் 147 ரன்களில் வெளியேற பந்த் 134 ரன்கள் எடுத்தார். அதன் பிறகு களம் இறங்கிய மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் இந்திய அணி 471 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனை அடுத்து இங்கிலாந்து அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் களம் இறங்கியது. ஆட்டத்தின் முதல் ஓவரிலே இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலி, பும்ராவின் பந்துவீச்சில் நான்கு ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்த தருணத்தில் இங்கிலாந்து அணியும் தடுமாறும் என ரசிகர்கள் எதிர் பார்த்தனர்.
ஆனால் பும்ராவை தவிர மற்ற இந்திய வீரர்கள் பந்துவீச்சு ஏதும் எடுபடவில்லை. இதன் காரணமாக ஏதோ சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடுவது போல் இங்கிலாந்து வீரர்கள் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய அணி வீரர்கள் தடுமாறினர். பும்ராவை தவிர சிராஜ் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் எதற்கு பந்து வீசுகிறோம் என்று தெரியாமல் பந்து வீசினார்கள்.
ஒரு கட்டத்தில் சிராஜ் ஒரு ஓவருக்கு நான்கு ரன்கள் மேலும், பிரசித் கிருஷ்ணா ஒரு ஓவருக்கு ஆறு ரன்களுக்கு மேலும் கொடுத்தனர். பும்ரா மட்டும்தான் 10 ஓவர்கள் வீசி 39 ரன்களை விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்ற வீரர்கள் தடுமாறினர். இதனால் இந்திய ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இந்த தொடரில் பும்ரா வெறும் மூன்று டெஸ்ட் போட்டிகள் தான் விளையாட போகிறார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய வீரர்களின் மிகவும் மோசமாக பந்துவீசுவதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications