For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மீண்டும் மீண்டும் அதே தப்பு.. ரோகித் - டிராவிட் கூட்டணியை தூக்கிருங்க.. கொந்தளிக்கும் ரசிகர்கள்!

ஐதராபாத் : இந்தியா அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரையும் நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

12 ஆண்டுகளுக்கு பின் சொந்த மண்ணில் 3 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெறாமல் தவறவிட்டுள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஆடிய 2 போட்டிகளில் ஒரு தோல்வி, ஒரு டிரா என்ற நிலையில், தற்போது இங்கிலாந்து அணியுடன் தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவருமே காரணமாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

IND vs ENG : Indian Fans bashing Rohit Sharma and Rahul Dravid should be removed from the Captain and Head Coach post


ஒவ்வொரு போட்டியிலும் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் திட்டமிடலில் மோசமாக செயல்பட்டு வருவது தெரிய வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் டிராவிஸ் ஹெட் சதம் விளாசிய பின்னரே, அவருக்கான திட்டங்களை இந்திய அணி நிர்வாகம் செயல்படுத்த தொடங்கியது. யாருக்கும் பிரத்யேக திட்டத்துடன் வரவில்லை. அதேபோல் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் திட்டமிடல் தான் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக முக்கியக் மாறியது.

அப்போது ஆஸ்திரேலியா அணியின் டிராவிஸ் ஹெட் ரன் குவிக்கும் போது எந்த திட்டத்தையும் ரோகித் சர்மா வைத்திருக்கவில்லை. தற்போது இங்கிலாந்து அணியின் போப் சதம் விளாசிய பின்னரும் எந்த திட்டத்தையும் வகுக்காமல் ரோகித் சர்மா களத்தில் தெளிவின்றி காணப்பட்டார். தற்போது செய்தியாளர்கள் சந்திப்பில் கூட பேச பயந்து, பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை அனுப்பியுள்ளார் ரோகித் சர்மா. அதுமட்டுமல்லாமல், பேஸ் பாலுக்கு எதிராக திட்டமிட வேண்டும் என்று அவர் இப்போது பதில் அளிக்கிறார்.

விராட் கோலி - ரவி சாஸ்திரி கூட்டணி இருந்த போது, பும்ராவை தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் களமிறக்க வேண்டும் என்று 6 மாதங்களுக்கு முன்பாகவே திட்டமிடப்பட்டது. ஆஸ்திரேலியா தொடரில் ஒரு போட்டியுடன் புறப்படுவேன் என்று முன்னதாகவே அறிந்து, ரஹானேவை ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் கேப்டன்சியை மேற்கொள்ள வைத்தது, யாருக்கும் எதற்கும் பயப்பட கூடாது என்ற கலாச்சாரத்தை விதைத்தது என்று திட்டமிடலிலும், ஸ்டைலும் எண்ணற்ற மாற்றங்களை செய்தார்கள்.

ஆனால் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் மீண்டும் மீண்டும் ஒரே தவறை செய்து வருகிறார்கள். இந்த தவறு சொந்த மண்ணிலேயே இந்திய அணி தோல்வியடைய காரணமாக மாறியுள்ளது. இதனால் டெஸ்ட் கேப்டன் மற்றும் பயிற்சியாளரை இருவரையும் மாற்ற வேண்டும் என்றும், விராட் கோலி தலைமையில் அணியை கொண்டு செல்ல வேண்டும் என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

Story first published: Monday, January 29, 2024, 11:05 [IST]
Other articles published on Jan 29, 2024
English summary
IND vs ENG : Indian Fans bashing Rohit Sharma and Rahul Dravid should be removed from the Captain and Head Coach post
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+