Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: இது தான் சிஎஸ்கே பவர்.. 600 விக்கெட் வீழ்த்திய ஜடேஜா.. தடுமாறிய இங்கிலாந்து பேட்டிங்

நாக்பூர் : இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 249 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்து இருக்கிறது. ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி நான்கிற்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றி பெற்ற நிலையில், ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் முதல் ஒருநாள் போட்டி நாக்பூர் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. டி20 கிரிக்கெட் ரன்களுக்கு மேல் அடிக்கப்படுவதால் ஒருநாள் கிரிக்கெட்டில் இன்று ரன் விருந்து நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ind vs eng virat kohli rohit sharma yashasvi jaiswal

இந்த சூழலில் தொடக்க வீரராக களமிறங்கிய பில் சால்ட், ஹர்சித் ரானா வீசும் ஒரே ஓவரில் 26 ரன்கள் விரட்டினார். இந்த சூழலில் பில் சால்ட் பென் டக்கட் செய்த தவறால் 43 ரன்களில் ரன் அவுட் ஆனார். இது இந்திய அணிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஒரே ஓவரில் பென் டக்கட் மற்றும் ஹாரி புருக் ஆகியோர் ஆட்டம் இழந்தனர்.

இதனால் இந்திய அணி மீண்டும் போட்டிக்குள் வந்தது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் ஜோ ரூட் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இதேபோன்று ஜடேஜாவும், அக்சர் பட்டேலும் கூட்டணி அமைத்துக் கொண்டு இங்கிலாந்தின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினர்.

கேப்டன் ஜாஸ் பட்லர் 67 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்த போது அக்சர் பட்டேல் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அதேபோன்று ஜேக்கப் பெத்தலும் ஜடேஜா பந்துவீச்சில் 51 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இந்த ஜோடி இங்கிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடிய நிலையில் இருவரும் முக்கிய கட்டத்தில் ஆட்டம் இழந்தனர்.

இதனால் இங்கிலாந்து அணி மீண்டும் சரிவை நோக்கி சென்றது. லிவிங்ஸ்டோன் ஹர்சித் ராணா பந்துவீச்சில் ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்தார். இதைப்போன்று பிரைடன் கர்ஸ் சமி பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இறுதியில் ஜோப்ரா ஆர்ச்சர் 21 ரன்கள் சேர்க்க மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் இங்கிலாந்து அணி 47.4 ஓவர் முடிவில் 248 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.

இந்திய பந்துவீச்சு தரப்பில் ஜடேஜா, ஹர்ஷித் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்த ஹர்திக் பாண்டியாவை தவிர மற்ற பவுலர்கள் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை குவித்த ஜடேஜா புதிய சாதனை படைத்திருக்கிறார். இதேபோன்று சர்வதேச கிரிக்கெட்டில் ஜோ ரூட்டை 12 முறை வீழ்த்தி ஜடேஜா அசத்தியிருக்கிறார்.

Story first published: Thursday, February 6, 2025, 17:18 [IST]
Other articles published on Feb 6, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+