For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs ENG: "அந்த சிவப்பு கலர் டீசர்ட்டை மாற்ற சொல்லுங்க.." பேட்டிங் செய்த போது ஜடேஜா வினோத கோரிக்கை

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஜடேஜா பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, ஒரு வினோத கோரிக்கை வைத்தது ரசிகர்கள் மத்தியில் சிரிப்பு அலையை ஏற்படுத்தியது. ஐந்தாவது போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது.

இந்திய அணி 224 ரன்களும், இங்கிலாந்து அணி 247 ரன்களும் முதல் இன்னிங்சில் எடுத்தனர். இதனை அடுத்து 23 ரன்கள் பின்தங்கிய நிலையில், இந்திய அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது.

Jadeja Red t shirt Fan

இதில் ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி தன்னுடைய ஆறாவது சதத்தை பூர்த்தி செய்தார். இதேபோன்று நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய ஆகாஷ் தீப் 66 ரன்கள் எடுத்திருந்தார். இந்த சூழலில் இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வந்த ஜடேஜா கடைசி டெஸ்டிலும் தன்னுடைய பேட்டி மூலம் அணியை காப்பாற்றினார்.

ஓவல் மைதானத்தில் இதுவரை 263 ரன்கள் தான் அதிகபட்ச நான்காவது இன்னிங்சிக் வெற்றிகரமான துரத்தப்பட்ட ஸ்கோர் ஆகும். இந்த நிலையில் இந்திய அணி தற்போது 300 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்று விளையாடி வருகிறது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறியது போல் தெரிவதால்,இந்திய அணி கூடுதல் ரன்களை எடுக்க வேண்டும்.

இந்த நெருக்கடியில் விளையாடி வந்த ஜடேஜா மீண்டும் அரை சதத்தை பூர்த்தி செய்தார். ஒரு கட்டத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ஜடேஜா நடுவரிடம் சென்று பார்வையாளர் மாடத்தில் இருக்கும் ஒரு நபர் சிவப்பு கலர் டீசர்ட் போட்டு இருப்பதாகவும், அது நான் பேட்டிங் செய்யும்போது கவனத்தை சிதறல் அடிப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இதனால் அதை மாற்ற சொல்லுங்கள் என்று நடுவரிடம் அவர் கோரிக்கை வைத்தார். ஜடஜாவின் இந்த கோரிக்கையை கேட்டு நடுவர் ஷாக் ஆனார். நான் எப்படி அவருடைய டீசர்ட்டை மாற்ற சொல்ல முடியும் என்று நடுவர் கேட்க, அப்போது அவரை வேறு இடத்திலாவது உட்கார வையுங்கள். இல்லை எனக்கு நேராக இருக்கும் ஸ்கிரீனை சரி செய்யுங்கள் என்று ஜடேஜா கூறினார்.

இதனை அடுத்து நடுவர், மைதான ஊழியரிடம் ஜடேஜாவின் கோரிக்கையை வைத்தார். அதன் பின் மைதான ஊழியர்கள் பார்வையாளர் மாட்த்தில் இருந்த ரசிகர்களிடம் உங்களுடைய டீசர்ட் ஜடஜாவின் கண்ணை உறுத்துகிறது. பந்தும், டீசர்ட்டும் சிவப்பு நிறத்தில் இருப்பதால், அது பேட்டிங் செய்யும்போது பந்தை பார்க்க முடியவில்லை.

கொஞ்சம் உங்களுடைய உடையை மாற்றிக் கொள்கிறீர்களா என்று கேட்டனர். இதைக் கேட்டவுடன் அந்த ரசிகர் ஷாக் ஆனார். நான் ஏதோ ஒரு மூலையில் அமர்ந்து போட்டியை பார்த்தால், என்னுடைய டீசர்ட் ஜடேஜாவின் கண்ணை உறுத்துகிறதா என்று அவர் கேட்டார். இதை அடுத்து மைதான ஊழியர் வேறு நிற டீசர்டை வந்து வழங்கிய பின், அதனை அந்த ரசிகர் மாற்றினார். இதனை கவனித்த ஜடேஜா தனது கையை உயர்த்தி அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். ரசிகரின் ஒரு டி-ஷர்ட்டை ஜடேஜா மாற்ற சொன்னது சமூக வலைத்தளத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Story first published: Saturday, August 2, 2025, 21:51 [IST]
Other articles published on Aug 2, 2025
English summary
Ind vs Eng- Jadeja ask Fan to change his Red colour T Shirt While batting
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+