Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட்.. தமிழக வீரரை கழற்றிவிட்ட பிசிசிஐ.. ஃபாஸ்ட் பவுலரை சேர்த்த ரோகித்

தரம்சாலா : இங்கிலாந்து அணிக்கு எதிராக தரம்சாலாவில் நடக்கவுள்ள 5வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை முடிவடைந்த 4 டெஸ்ட் போட்டிகளில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. இங்கிலாந்து அணி பேஸ் பால் அணுகுமுறையில் விளையாடி தோல்வியடைந்த முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும்.

IND vs ENG : Jasprit Bumrah came back to Indian team for the 5th Test against England at Dharamsala

இதனால் இந்திய அணியை கடைசி டெஸ்ட் போட்டியில் வென்று பதிலடி கொடுக்க பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது. அதேபோல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட ஒவ்வொரு வெற்றியும் முக்கியம் என்பதால் கடைசி போட்டியில் வெல்ல ரோகித் சர்மா தீவிரமாக இருக்கிறார்.

இதனிடையே கடைசி போட்டியில் கேஎல் ராகுல் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்டோர் இந்திய அணிக்கு திரும்புவார்களா என்ற குழப்பம் ரசிகர்களிடையே இருந்தது. இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி இந்திய அணியின் துணை கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் இந்திய முகாமில் இணைந்துள்ளார்.

தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்த அவருக்கு 4வது டெஸ்ட் போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டது. அவருக்கு பதிலாக அறிமுக வீரர் ஆகாஷ் தீப்பிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. சிறப்பாக விளையாடிய அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதேபோல் கேஎல் ராகுல் லண்டனில் காயத்திற்கு சிகிச்சை பெறுவதால், 5வது டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ரஞ்சி டிராபி போட்டியில் விளையாட அனுப்பி வைக்கப்பட்ட முகேஷ் குமார் மீண்டும் இந்திய அணியுடன் இணைந்துள்ளார். அதேபோல் வாஷிங்டன் சுந்தர் கழற்றிவிடப்பட்டுள்ளார். இளம் வீரர்களான ரஜத் பட்டிதர், சர்ஃபராஸ் கான், தேவ்தத் படிக்கல் ஆகியோரும் 5வது டெஸ்ட் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 5வது டெஸ்ட் போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி விவரம்: ரோகித் சம்ரா, ஜஸ்பிரித் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரஜத் பட்டிதர், சர்ஃபராஸ் கான், துருவ் ஜுரெல், கேஎஸ் பரத், தேவ்தத் படிக்கல், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.

Story first published: Thursday, February 29, 2024, 15:05 [IST]
Other articles published on Feb 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+