லீட்ஸ்: இந்திய கிரிக்கெட் உருவாக்கியதிலே மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர் என்றால் அது பும்ரா தான் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி பாராட்டு தெரிவித்து இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 471 ரன்கள் குவித்தது.
இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி ரன் குவிப்பில் ஈடுபட்டது. பும்ராவை தவிர மற்ற இந்திய வீரர்கள் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. இரண்டாவது நாள் ஆட்டநேரம் முடிவில் இங்கிலாந்து அணி மூன்று விக்கெட்டுகள் இழந்து 209 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த மூன்று விக்கெட்டுமே எடுத்தது பும்ரா தான். இந்த சூழலில் பும்ராவில் இந்த செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, பும்ராவை வெகுவாக பாராட்டி இருந்தார்.அதில் இந்தியாவின் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நான் கபில் தேவ் உடன் விளையாடி இருக்கின்றேன். ஆனால் பும்ராவை பார்க்கும் போது இவர் வித்தியாசமாக இருக்கின்றார். எந்த ஒரு எதிரணியையும் கிழித்து தொங்க விடுகிறார்.அதுவும் எந்த ஆடுகளமாக இருந்தாலும் சரி, எந்த வகை கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி.நான் பார்த்ததிலேயே வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் மால்காம் மார்ஷ் பேட்ஸ்மேன்களில் மனதைப் படித்து அதற்கு ஏற்ப பந்துகளை வீசி விக்கெட்டுகளை எடுப்பார்.
பும்ரா அவரை ஒப்பிடும்போது வெகு தொலைவில் இல்லை. பும்ரா தொடர்ந்து தன்னுடைய பந்துவீச்சில் முன்னேற்றம் கண்டு வருகின்றார். புதிய பந்தை நன்றாக ஸ்விங் செய்து வருகின்றார். இதனால் எந்த ஒரு பேட்ஸ்மேன்களுக்கும் அவர்கள் எதிர்கொள்ள கடினமாக தான் இருக்கும்.
அது மட்டுமில்லாமல் அவருடைய பந்துவீச்சு முறையும் பேட்ஸ்மேன்களுக்கு எதிர்கொள்ள கடினமாக இருக்கும். இந்திய அணி கூடுதலாக ஒரு 75, 80 ரன்கள் சேர்த்து இருந்தால் நிச்சயம் நன்றாக இருந்திருக்கும். எனினும் இப்போதும் கூட இந்திய அணியின் கையே ஓங்கி இருக்கிறது என்று நான் நினைக்கின்றேன் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.