For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இன்னும் 8 நாள் தான் இருக்கு.. சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா விளையாடுவாரா? அகார்கர் சொன்ன தகவல்

மும்பை : சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடத்தப்படுகிறது. இந்தியா விளையாடும் போட்டிகள் ஆனது ஹைபிரிட் முறைப்படி துபாயில் நடைபெற இருக்கின்றது.

இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியா தொடரில் காயம் அடைந்த பும்ராவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் பும்ரா கண்டிப்பாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

ind vs eng jasprit bumrah champions trophy ajit agarkar

இந்த சூழலில் வரும் பிப்ரவரி 11-ம் தேதிக்குள் இறுதி கட்ட அணிகளை அறிவிக்க வேண்டும் என ஐசிசி கெடு விதித்திருக்கிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அணியில் ஏதேனும் மாற்றம் செய்ய அன்றைய நாளே, கடைசி நாள் ஆகும். இதனால் அதற்குள் பும்ரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு எடுக்க வேண்டும்.

இதனால் இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் பும்ரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடுவது குறித்து அகாக்கர் இறுதி முடிவு எடுக்கப் போகிறார். ஒருவேளை பும்ரா முழு உடல் தகுதியை எட்டவில்லை என்றால் அவருக்கு பதில் ஹர்ஷித் ரானா மாற்றுவீராக அறிவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. தற்போது இங்கிலாந்து அணி எதிராக மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது.

இதில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் பும்ராவின் பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதனால் அதற்குள் பும்ரா அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பும்ராவுக்கு 5 வாரம் ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் அவர் இங்கிலாந்துக்கு எதிராக முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க மாட்டார். உடல் தகுதியை மருத்துவ குழு பிப்ரவரி முதல் வாரத்தில் பரிசோதனை செய்யும்.

அதில் அவர்கள் என்ன அறிக்கை கொடுக்கிறார்களோ அதை வைத்து நாங்கள் இறுதி முடிவை எடுப்போம் என்று அகாக்கர் கூறியுள்ளார். தற்போது பும்ரா ஸ்கேன் பரிசோதனை மீண்டும் செய்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்கி உடல் தகுதியை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு இந்திய அணி பிப்ரவரி 15ஆம் தேதி துபாய் புறப்பட்டு செல்கிறது.

Story first published: Monday, February 3, 2025, 17:03 [IST]
Other articles published on Feb 3, 2025
English summary
Ind vs Eng- Jasprit bumrah participation will be cleared in 8 days says Ajit Agarkar இன்னும் 8 நாள் தான் இருக்கு.. சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா விளையாடுவாரா? அகார்கர் சொன்ன தகவல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+