Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: 387 ரன்கள் குவித்த இங்கிலாந்து..Honours Board-ல் இடம்பிடித்த பும்ரா..இங்கி.மண்ணில் சாதனை

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெடுகளையும் இழந்தது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது.

இந்த நிலையில் மூன்றாவது போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி இருந்தது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

Ind vs Eng

இங்கிலாந்து அணி அதிரடியாக ரன் குவிப்பாளர்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட் என ஏற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இங்கிலாந்த அணி 251 ரன்களுக்கு நான்கு விக்கெட் என்ற ஸ்கோருடன் இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. 99 ரண்களில் இருந்த ஜோ ரூட் தன்னுடைய 37வது சதத்தை பூர்த்தி செய்தார்.

ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் இருந்த போது பும்ரா அபாரமாக பந்து வீசி இரண்டு ஓவர்கள் இடைவேளையில் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக ஹட்ரிக் விக்கெட் சாதனையை அவர் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த வாய்ப்பு அவருக்கு பறிபோனது. ஸ்டோக்ஸ் 44 ரன்களும், அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்த சூழலில் இங்கிலாந்து அணி 271 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த கட்டத்தில் ஜெமி ஸ்மித் மற்றும் பிரைடன் கர்ஸ் ஜோடி ஆகியோர் அபாரமாக விளையாடி எட்டாவது விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டது. சிறப்பாக விளையாடிய ஜெமி ஸ்மித் 51 ரன்களின் ஆட்டம் இழக்க பிரைடன் கர்ஸ் 56 ரன்களில், சிராஜ் பந்துவீச்சில் பெவலியன் திரும்பினார்.

இதன் மூலம் இங்கிலாந்து அணி 112.3 ஓவரில் 387 ரன்கள் எடுத்தது. இதில் இந்தியா பந்துவீச்சு தரப்பில் சிறப்பாக செயல்பட்ட பும்ரா ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்ற சிராஜ் மற்றும் நிதீஷ்குமார் ரெட்டி ஆகியோர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதை அடுத்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இருந்த ஹானார்ஸ் போர்டு பும்ராவின் பெயரும் இடம் பெற்றது.

இதேபோன்று சேனா நாடுகளில் அதிக முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் பும்ரா தற்போது 11 முறை வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். இதேபோன்று இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளில் இரண்டு முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய ஐந்தாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையும் கிடைத்திருக்கிறது. இதுபோன்று இங்கிலாந்து மண்ணில் அதிக விக்கெட்டுகள் இந்திய வீரர்கள் பட்டியலில் பும்ரா 47 விக்கெட் உடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இஷாந்த் ஷர்மா 51 விக்கெட்டுடன் முதலிடத்தில் இருக்கின்றார்.

Story first published: Friday, July 11, 2025, 19:43 [IST]
Other articles published on Jul 11, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+