Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: ரன் குவிப்பில் ஈடுபட்ட இங்கிலாந்து.. 3 விக்கெட்டுகளை கைப்பற்றி பும்ரா அசத்தல்

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா சீரான இடைவெளியில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி தாம் உலகின் சிறந்த பவுலர் என்பதை நிரூபித்திருக்கின்றார். 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது.

இந்த சூழலில் மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து வீரர்கள் ரன் குவிப்பில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

Jasprit Bumrah

இந்த நிலையில் அவர்கள் பேஸ் பால் ஆட்டத்தை விளையாடாமல் டெஸ்ட் கிரிக்கெட் என உரிய ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் ஜாக் கிராலி 18 ரன்களிலும், பென் டக்கட் 23 ரன்களிலும், ஆலி போப் 44 ரன்களும், ஹாரி புரூக் 11 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். எனினும் அபாரமாக விளையாடிய ஜோ ரூட் சதம் விளாசி அசத்தினார்.

இதேபோன்று பென் ஸ்டோக்ஸ் 44 ரன்கள் எடுத்திருந்தார். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 260 ரன்களுக்கு நான்கு விக்கெட் என்ற ஸ்கோரில் இருந்தது.இதனால் இங்கிலாந்து அணி 400 ரன்கள் குவிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அப்போதுதான் பும்ரா கையில் பந்து வந்தது. பும்ரா வழக்கம் போல் தன்னுடைய புத்திசாலித்தனமான பந்துவீச்சை வீசினார்.

பும்ராவின் பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். முதலில் 85.2 வது ஓவரில் பென் ஸ்டோக்ஸ் ஸ்டெம்புகள் சிதற ஆட்டமிழந்தார். மீண்டும் 87வது ஓவரின் வீசியபோது முதல் பந்தில் சதம் விளாசிய ஜோ ரூட் விக்கெட்டையும் அடுத்த பந்தில் கிறிஸ் வொக்ஸ் விக்கெட்டையும் பும்ரா வீழ்த்தினார்.

இதன் மூலம் ஹட்ரிக் சாதனையை படைக்க பும்ராவுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. எனினும் அது தவறி போனது. பும்ரா 58 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 11 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறது. அதேபோன்று சர்வதேச கிரிக்கெட்டில் பும்ரா 450 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கின்றார்.

Story first published: Friday, July 11, 2025, 16:34 [IST]
Other articles published on Jul 11, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+