IND vs ENG: முதல் பந்திலேயே விக்கெட்.. கதி கலங்கிய இங்கிலாந்து.. பும்ரா அபாரம்
கார்டிஃப்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஒற்றை ஆளாக முன்னின்று வழிநடத்தி வருகிறார். கார்டிப்பில் உள்ள சோபியா கார்டன்ஸில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 233 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி இங்கிலாந்து இன்னிங்ஸின் முதல் ஓவரை இந்திய அணியின் சிறந்த வலதுகை வேகப்பந்து வீச்சாளர் பும்ரா,வீசினார்.அப்போது அவர் வீசிய முதல் பந்திலேயே இங்கிலாந்து தொடக்க வீரர் பென் டக்கெட்டின் விக்கெட்டை வீழ்த்தி ஒட்டுமொத்த மைதானத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இடதுகை பேட்ஸ்மேனான பென் டக்கெட், பும்ரா வீசிய அபாரமான பந்தை கணிக்க முடியாமல் விக்கெட் கீப்பர் இஷான் கிஷானிடம் கேட்ச் கொடுத்து 'கோல்டன் டக்' ஆகி மைதானத்தை விட்டு வெளியேறினார்.பும்ராவின் இந்த அதிரடித் துவக்கம் இந்திய அணிக்கு இப்போட்டியில் மிகப்பெரிய சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தது. அவரது துல்லியமான லைன் மற்றும் ஸ்விங் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து திணறினர்.
பென் டக்கெட்டின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி இன்னிங்ஸின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார். இதற்கு முன் எந்தவொரு இந்திய பந்துவீச்சாளரும் இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச கிரிக்கெட்டில் பும்ரா ஏற்கனவே பல்வேறு சாதனைகளை படைத்து உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார். குறிப்பாக, ஒருநாள் போட்டிகளில் 150 விக்கெட்டுகள், டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் 100 விக்கெட்டுகள் என்ற மைல்கற்களை எட்டிய முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியாவின் முதன்மை பந்துவீச்சு காரணியாக விளங்கும் பும்ரா, சர்வதேச அரங்கில் தொடர்ந்து பல சாதனைகளை முறியடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications

